கடலை மிட்டாய் விற்பனையில்.. கண் பார்வையற்ற சங்கர் எம்.ஏ.,எம்.எட்.,

Updated : நவ 06, 2021 | Added : நவ 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சங்கர் , திருத்தணியைச் சேர்ந்தவர், பார்வைக் குறைபாடுடன் பிறந்தவர் பெற்றோர் ஆதரவுடன் பள்ளி கல்லுாரி படிப்பை முடித்தவர்.எம்.ஏ.,பி.எட்.,படித்துவிட்டு அரசு தேர்வுகளில் கலந்து கொண்டு எப்படியும் அரசு வேலை வாங்கிவிட வேண்டும் என்ற முனைப்புடன் இருப்பவர் அதற்கான முயற்சிகளை தொடர்பவர்.வேலை வரும் வரை சும்மாயிருக்கக் கூடாது என்பதற்காக மின்சார ரயிலில் கடலை



latest tamil news



சங்கர் , திருத்தணியைச் சேர்ந்தவர், பார்வைக் குறைபாடுடன் பிறந்தவர் பெற்றோர் ஆதரவுடன் பள்ளி கல்லுாரி படிப்பை முடித்தவர்.
எம்.ஏ.,பி.எட்.,படித்துவிட்டு அரசு தேர்வுகளில் கலந்து கொண்டு எப்படியும் அரசு வேலை வாங்கிவிட வேண்டும் என்ற முனைப்புடன் இருப்பவர் அதற்கான முயற்சிகளை தொடர்பவர்.
வேலை வரும் வரை சும்மாயிருக்கக் கூடாது என்பதற்காக மின்சார ரயிலில் கடலை மிட்டாய்,பர்பி,கமர்கட்,இஞ்சி மிட்டாய் போன்ற மிட்டாய்களை வியாபாரம் செய்து வந்தார்.


latest tamil news



காலை எட்டு மணிக்கு துவங்கி இரவு எட்டு மணி வரை ஒவ்வொரு பெட்டியாக ஏறி இறங்கி வியபாரம் செய்தால் ஒரு நாளைக்கு முன்னுாறு ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.
இந்த வருமானத்தில் சென்னையில் மனைவி குழந்தையுடன் வசிக்க முடியாது என்பதால் திருத்தணி தாண்டி வீடு வாடகைக்கு பிடித்து அதில் மனைவி குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார்.
காலை ஐந்து மணிக்கு எழுந்து தயராகி வீட்டை விட்டு கிளம்பிவிட்டார் என்றால் திரும்ப இரவு ஒன்பது மணிக்குதான் வீடு திரும்புவார் விடுமுறை விசேஷம் எல்லாம் கிடையாது உழைப்பே பிரதானம் என்று வாழ்க்கை நடத்துபவர்.
வியாபாரத்திற்கு தேவைப்படும் கடலை மிட்டாய் உள்ளீட்ட சரக்கு வாங்க வேண்டும் என்றால் தான் மட்டுமல்லாது தன்னைப் போன்றவர்களும் மிட்டாய் உற்பத்தியாகும் வண்ணாரப்பேட்டை வரை சிரமத்துடன் போய்வர வேண்டிய சூழ்நிலை இருந்தது, இதை எப்படி மாற்றுவது என்று யோசித்தார்.
வண்ணாரப்பேட்டையில் இருந்து மொத்தமாக வாங்கி அதை குறைந்த விலைக்கு எல்லோரும் எளிதில் வந்து வாங்கிச் செல்லக்கூடிய சைதாப்பேட்டையில் வைத்து விற்கலாம் என்று முடிவு செய்தார், எடுத்த முடிவை செயல்படுத்தியும் விட்டார்.
இப்போது எல்லோரும் இவரது மேற்கு சைதாப்பேட்டை ரெட்டி குப்பம் சாலையில் உள்ள இவரது கடைக்கு வந்து செல்கின்றனர் வரக்கூடியவர்களிடம் உற்சாகமாக பேசுவது படித்திருப்பதால் அவர்களுக்கு தேவையான விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவுவது என்று நிறையவே உதவுகிறார்.
குறைவான விலையில் தரமான கடலை மிட்டாய்,இஞ்சி மிட்டாய்,பர்பி,கமர்கட் போன்றவைகள் மொத்தமாகவும் சில்லரையாகவும் வாங்க விரும்புபவர்கள் இவரை தொடர்பு கொள்ளலாம் இவரது எண்:99520 13127.


-எல்.முருகராஜ்


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சாதிக், சென்னை வாழ்த்துகள் ஷங்கர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X