தீபாவளிக்கு போளி

Updated : நவ 06, 2021 | Added : நவ 06, 2021
Share
Advertisement
சிப்பிக்குள் பளிச்சிடும் முத்துக்கு போட்டியாக பிறந்தவள். தீப ஒளியை விட பிரகாசமான கரிய மை விழிகள். உலக அதிசயங்களையே அய்யோ என்று சொல்ல வைக்கும் அழகு தென்றல் காற்றும் தொட்டு விளையாடும் நீள் கூந்தல் பிரம்மனே பிரம்மிக்கும் பிரபஞ்சத்தின் பேரழகி என வர்ணிக்க தகுதியான நடிகை சனம் ஷெட்டி தினமலர் வாசகர்களுக்காக பேசியது:உங்களைப் பற்றி சொந்த ஊர் பெங்களூரு.
தீபாவளிக்கு போளி

சிப்பிக்குள் பளிச்சிடும் முத்துக்கு போட்டியாக பிறந்தவள். தீப ஒளியை விட பிரகாசமான கரிய மை விழிகள். உலக அதிசயங்களையே அய்யோ என்று சொல்ல வைக்கும் அழகு தென்றல் காற்றும் தொட்டு விளையாடும் நீள் கூந்தல் பிரம்மனே பிரம்மிக்கும் பிரபஞ்சத்தின் பேரழகி என வர்ணிக்க தகுதியான நடிகை சனம் ஷெட்டி தினமலர் வாசகர்களுக்காக பேசியது:


உங்களைப் பற்றி


சொந்த ஊர் பெங்களூரு. இன்ஜினியரிங் படிச்சிருக்கேன். லண்டனில் இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தேன். அங்கு இருக்கும் போது 2 படங்களில் நடிச்சேன். சினிமாவுக்காக இப்போ சென்னையிலேயே செட்டில் ஆயிட்டேன்.


நடித்த படங்கள்


தென்னிந்திய மொழிகளில் 24 படங்களில் நடிச்சிருக்கேன். இப்போ ஊமை செந்நாய், எதிர் வினையாற்று படங்கள் ரிலீஸூக்கு தயாரா இருக்கு. நடிப்பு மட்டுமின்றி... அப்பப்போ மாடலிங்கும் பண்ணுவேன். விளம்பர படங்களிலும் நடிச்சிட்டு இருக்கேன்.


பிடித்த இயக்குனர்


வெற்றிமாறன், ராம், நெல்சன் பிடிக்கும். வழக்கம் போல் காதல் காட்சி, கல்லுாரி மாணவி போன்ற கதையெல்லாம் இல்லாமல் கோலமாவு கோகிலா, நானும் ரவுடி தான், அருவி படங்களில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்தது போன்ற கதைகளில் நடிக்க ரொம்ப ஆசை.


'பிக் பாஸ்'அனுபவம்


அய்யோ... மறக்கவே முடியாத அனுபவங்கள். பிக் பாஸூக்கு அப்புறம் 6 மாசம் குடும்பத்தோடு பொழுதை போக்கினேன். வெளியே எங்கேயும் போகல. பிக்பாஸ் வீட்டில் நடப்பதெல்லாம் நடிப்புன்னு மக்கள் நினைக்கிறாங்க. அப்படியெல்லாம் கிடையாது. எல்லாமே இயல்பாக நடந்தது. நாங்க நாங்களாவே தான் இருந்தோம்.


தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல்


கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டிற்குள் தீபாவளி கொண்டாடினேன். குடும்பத்தினரை ரொம்பவே மிஸ் பண்ணினேன். இம்முறை குடும்பத்தினரோடு தான் தீபாவளி கொண்டாட்டம். வேற எந்த பிளானும் இல்ல. பலகாரமெல்லாம் சாப்பிட்டு ஜாலியா இருக்கணும். கொரோனா காலம் என்பதால்... மக்களே, பாதுகாப்பா கொண்டாடுங்க. கட்டாயம் தடுப்பூசி போடுங்க. அப்பதான் கொரோனாவை தோற்கடிக்க முடியும். அடுத்த தீபாவளி கொரோனா இல்லாத தீபாவளியாக இருக்கணும்.


பட்டாசு வெடிப்பீங்களா


பட்டாசு இல்லாத தீபாவளியா. ஆனா பட்டாசு வெடிக்கிறதுனால ஏற்படுற புகையால் காற்று மாசுபடும். அதனால் கொஞ்சமா வெடிப்பேன். வீடு முழுவதும் விளக்கேற்றி 'செம'யா கொண்டாடுவோம்.


பலகாரம் செய்ய தெரியுமா


அட நானும் ஸ்வீட் எல்லாம் பண்ணுவேன் தெரியுமா... பாயாசம், அதிரசம் சூப்பரா பண்ணுவேன். அதுல யாராலும் என்னை அடிச்சிக்கவே முடியாது. தீபாவளிக்கு வீட்ல பண்ணுற போளி ரொம்ப பிடிக்கும்.
இவரை வாழ்த்த @sam.sanam.shetty (instagram)

-நல்லசிவன்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X