சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'இன்னமும் நம்புறாங்களே பா...'

Added : நவ 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'இன்னமும் நம்புறாங்களே பா...'வேலுாரில், தேசிய கல்வியாளர்கள் பேரவை கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற பின், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'தமிழகத்தில் மாணவர்களின் நலன் கருதி, தேசிய கல்வி கொள்கை, நவோதயா பள்ளி, மும்மொழி கல்வி திட்டம் ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும். 'நீட்' தேர்வை ரத்து செய்யவே
பக்க வாத்தியம்


'இன்னமும் நம்புறாங்களே பா...'



வேலுாரில், தேசிய கல்வியாளர்கள் பேரவை கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற பின், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'தமிழகத்தில் மாணவர்களின் நலன் கருதி, தேசிய கல்வி கொள்கை, நவோதயா பள்ளி, மும்மொழி கல்வி திட்டம் ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும். 'நீட்' தேர்வை ரத்து
செய்யவே முடியாது. தமிழகத்தில் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும். இதே நிலை நீடித்தால், தமிழகத்தில் வழங்கப்படும் பட்டங்கள் பயனற்று போய்விடும்; செல்லாததாக மாறிவிடும்...' என்றார்.
அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'படிச்சவங்க, விஷயம் தெரிஞ்சவங்க எவ்வளவு தான் சொன்னாலும், திராவிட அரசியல்வாதிகளின் போலியான பேச்சை, தமிழக மக்களில் சிலர் இன்னமும் நம்புறாங்களே...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.


'மத்திய அரசுக்கும் பொறுப்பு இருக்கு!'



பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை, மதுரையில் நிருபர்களை சந்தித்தார்.அவரிடம், 'தமிழகத்தில் பா.ஜ., காலுான்றவே, கவர்னர் ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என, காங்., மாநில தலைவர் அழகிரி கூறியுள்ளாரே...' என கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு அண்ணாமலை, 'தமிழகத்தில் எது நடந்தாலும், அதற்கு, பா.ஜ., தான் காரணம் என சொல்லும் ஒரு கும்பல் சுத்திக்கிட்டு இருக்கிறது... தமிழகத்தில் மழை பெய்யவில்லை என்றாலும், மாடு சரியாக புல்லு சாப்பிடலை என்றாலும், பா.ஜ., தான் காரணம் என சொல்லுறாங்க...' என்றார்.
அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'நாட்டில் எது நடந்தாலும், அதில் மத்திய அரசுக்கு பங்கு, பொறுப்பு எல்லாம் இருக்கும் என சொல்ல வேண்டியது தானே... நாட்டை ஆள தானே, மக்கள் பா.ஜ.,விற்கு ஓட்டு போட்டனர்... சாதாரண விஷயத்துக்கே மாடு, மழைன்னு ஏன், 'ஜகா' வாங்கணும்...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.


'சொல்ல மாட்டாங்களே!'



திருச்சியில் பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கும் விழா, சமீபத்தில் நடந்தது. அதில் பங்கேற்ற, பால்வளத் துறை அமைச்சர் நாசர், நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'கடந்த ஆட்சியில் ஆவினில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த, 10 ஆண்டுகளில் கிடப்பில் போடப்பட்ட ஆவின் துறைக்கு மீண்டும் உயிர்கொடுத்து வருகிறோம்...' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'கடந்த ஆட்சி
யில் நடந்த முறைகேடுகளை விசாரிப்பதோடு நிறுத்தி கொள்ளாமல், இந்த ஆட்சியில் மோசடி ஏதும் நடக்காமல் பார்த்துக் கொள்வதும், அமைச்சரின் கடமை...' என்றார்.அருகிலிருந்த இளம் நிருபர், 'அதை பற்றி மட்டும் சொல்லவே மாட்டேங்கிறாங்க...'' என்றதும்,
சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
07-நவ-202119:26:04 IST Report Abuse
D.Ambujavalli நவோதயா பள்ளிகள் வந்து, மாணவர்கள் அந்தப்பக்கம் சாய்ந்துவிட்டால் தங்கள் பள்ளிகளின் சேர்க்கை பாதிக்கும் என்ற சுயநலம்தான் காரணம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X