வேலை கிடைக்காததால் டீ விற்கும் பட்டதாரி பெண்

Added : நவ 06, 2021 | கருத்துகள் (7)
Advertisement
கோல்கட்டா:எம்.ஏ., பட்டம் பெற்றுள்ள மேற்கு வங்க பெண், வேலை கிடைக்காததால் ரயில் நிலையத்தில் டீக்கடை நடத்தி வருகிறார்.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள வடக்கு 24 பர்கானா மாவட்டம் ஹாப்ரா ரயில் நிலையத்தில் உள்ள டீக்கடை பலரையும் கவர்ந்துள்ளது.'எம்.ஏ., ஆங்கிலம் டீக்கடைக்காரி' என பெயரிடப்பட்டு உள்ள அந்தக் கடையை
 வேலை கிடைக்காததால் டீ விற்கும் பட்டதாரி பெண்

கோல்கட்டா:எம்.ஏ., பட்டம் பெற்றுள்ள மேற்கு வங்க பெண், வேலை கிடைக்காததால் ரயில் நிலையத்தில் டீக்கடை நடத்தி வருகிறார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள வடக்கு 24 பர்கானா மாவட்டம் ஹாப்ரா ரயில் நிலையத்தில் உள்ள டீக்கடை பலரையும் கவர்ந்துள்ளது.'எம்.ஏ., ஆங்கிலம் டீக்கடைக்காரி' என பெயரிடப்பட்டு உள்ள அந்தக் கடையை நடத்தி வருகிறார்,

டுக்டுகி தாஸ் என்ற இளம் பெண்.இவரது தந்தை, வேன் டிரைவராக உள்ளார். தாய், பெட்டிக் கடை நடத்தி வருகிறார்.நன்கு படித்து ஆசிரியராக வேண்டும் என்ற ஆசையில் எம்.ஏ., ஆங்கிலம் படித்துள்ளார். பல போட்டித் தேர்வுகள் எழுதியும், பல இடங்களில் முயற்சித்தும் சரியான வேலை கிடைக்கவில்லை.ஆனாலும் மனம் தளராமல் சுயதொழில் செய்ய முடிவு செய்தார். அதன்படி ஹாப்ரா ரயில் நிலையத்தில் டீக்கடையை திறந்துள்ளார் டுக்டுகி தாஸ்.

அவர் கூறியதாவது:எந்தத் தொழிலையும் இழிவாக பார்க்கக் கூடாது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், எம்.பி.ஏ., படிக்க முயன்று தோல்வியடைந்ததால், எம்.பி.ஏ., டீக்கடை என்ற பெயரில் டீக்கடை துவக்கினார். தற்போது நாட்டின் பல்வேறு இடங்களில் கிளைகளை திறந்து கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறார்.படிப்புக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்காவிட்டால், சொந்தமாக தொழில் செய்வதே சிறந்ததாக இருக்கும் என்பதால், இந்தக் கடையை திறந்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raj82 - chennai,இந்தியா
12-நவ-202117:43:26 IST Report Abuse
raj82 Pradamar aga vazthukal
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
10-நவ-202112:21:07 IST Report Abuse
jayvee இன்று பல இன்ஜினியரிங் பட்டதாரிகள் சாப்ட்வேர் கம்பெனியில் மட்டுமே வேலை செய்வேன் என்று அடம்பிடித்துக்கொண்டு வீட்டில் பப்ஜி விலைடிக்கொண்டிருக்கிறார்கள் .. அதற்க்கு இது எவ்வ்லவோ மேல்
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
10-நவ-202112:02:56 IST Report Abuse
raja நான் கூடத்தான் பொறியியல் படித்து விட்டு வேலை கிடைக்காமல் மூன்று வருடம் பட்டறையில் சம்மட்டி அடித்தேன்.... இப்படி விளம்பரம் செய்ய அப்போ ஆளில்லாமல் போயிடிச்சே.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X