கோல்கட்டா:எம்.ஏ., பட்டம் பெற்றுள்ள மேற்கு வங்க பெண், வேலை கிடைக்காததால் ரயில் நிலையத்தில் டீக்கடை நடத்தி வருகிறார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள வடக்கு 24 பர்கானா மாவட்டம் ஹாப்ரா ரயில் நிலையத்தில் உள்ள டீக்கடை பலரையும் கவர்ந்துள்ளது.'எம்.ஏ., ஆங்கிலம் டீக்கடைக்காரி' என பெயரிடப்பட்டு உள்ள அந்தக் கடையை நடத்தி வருகிறார்,
டுக்டுகி தாஸ் என்ற இளம் பெண்.இவரது தந்தை, வேன் டிரைவராக உள்ளார். தாய், பெட்டிக் கடை நடத்தி வருகிறார்.நன்கு படித்து ஆசிரியராக வேண்டும் என்ற ஆசையில் எம்.ஏ., ஆங்கிலம் படித்துள்ளார். பல போட்டித் தேர்வுகள் எழுதியும், பல இடங்களில் முயற்சித்தும் சரியான வேலை கிடைக்கவில்லை.ஆனாலும் மனம் தளராமல் சுயதொழில் செய்ய முடிவு செய்தார். அதன்படி ஹாப்ரா ரயில் நிலையத்தில் டீக்கடையை திறந்துள்ளார் டுக்டுகி தாஸ்.
அவர் கூறியதாவது:எந்தத் தொழிலையும் இழிவாக பார்க்கக் கூடாது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், எம்.பி.ஏ., படிக்க முயன்று தோல்வியடைந்ததால், எம்.பி.ஏ., டீக்கடை என்ற பெயரில் டீக்கடை துவக்கினார். தற்போது நாட்டின் பல்வேறு இடங்களில் கிளைகளை திறந்து கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறார்.படிப்புக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்காவிட்டால், சொந்தமாக தொழில் செய்வதே சிறந்ததாக இருக்கும் என்பதால், இந்தக் கடையை திறந்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE