ஐதராபாத்:அமெரிக்காவில் குழந்தைகளுக்கான 'கோவாக்சின்' தடுப்பூசிக்கு அனுமதி வழங்கக்கோரி, அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு நிர்வாகத்திடம், 'பாரத் பயோடெக்'குடன் ஒப்பந்தம் செய்துள்ள ஆக்குஜென் இன்க்., நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
ஒப்பந்தம்
தெலுங்கானா தலைநகர் ஐதராபாதை தலைமையிடமாக வைத்து இயங்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இரண்டு 'டோஸ்'களாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.இதற்கிடையே, 2 - 18 வயது வரையிலான குழந்தைகளுக்காக கோவாக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த தடுப்பூசியின் இரண்டு கட்ட பரிசோதனைகளும் முடிக்கப்பட்டுள்ளன. இதில் சாதகமான முடிவு கிடைத்துள்ளது. குழந்தைகளுக்கான இந்த கோவாக்சின் தடுப்பூசியை அமெரிக்கா மற்றும் கனடாவில் தயாரித்து வினியோகிக்க அமெரிக்காவின் பென்சில்வேனியாவை தலைமையிடமாக வைத்து இயங்கும் ஆக்குஜென் இன்க்., என்ற நிறுவனம், பாரத் பயோடெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
பரிசோதனை
இந்நிலையில் அமெரிக்காவில் இந்த தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கக்கோரி, எப்.டி.ஏ., எனப்படும், அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுப் பாட்டு நிர்வாகத்திடம் ஆக்குஜென் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இதற்காக பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியின் பரிசோதனை முடிவுகளை சமர்ப்பித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE