சென்னை :'ஜெய்பீம்' படக்குழு மன்னிப்பு கேட்க, வன்னியர் சங்கம் வலியுறுத்திய நிலையில், சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்பட்டுள்ளது.நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள, 'ஜெய்பீம்' படம், 'ஆன்லைனில்' வெளியானது. இதில், உண்மை சம்பவத்தை படமாக்கியதாக கூறிய நிலையில், வன்னிய சமூகத்தை வேண்டுமென்றே இழிவுபடுத்தி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வன்னியர் சங்கம் வலியுறுத்தியது.
சங்க தலைவர் பு.தா.அருள்மொழி அறிக்கை:மறைக்கப்பட்ட ஒடுக்குமுறைகளை வெளியில் கொண்டு வருவதே, இப்படத்தின் நோக்கம் என படக்குழு பெருமை பேசியுள்ளது; நல்லது. அவ்வாறான முத்திரை குத்தப்பட்ட படத்தில், உண்மைகளை மறைத்து பொய்யை கட்டமைக்க முயன்றிருப்பதும், நல்லவர்களை கெட்டவர்களாக காட்ட முயன்றிருப்பதும், ஒரு சமுதாயத்தையே இழிவுபடுத்தும் செயல்.
![]()
|
மன்னிப்பு
பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர், காவல் துறை விசாரணை என்ற பெயரில் கொலை செய்யப்பட்டுள்ள உண்மையை காட்டுவதை விட, அந்த படுகொலையை அரங்கேற்றிய காவலர், ஒரு வன்னியர் என்ற பொய்யை நிலைநிறுத்துவதற்காக தான் படக்குழு பாடுபட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட காவலர் காட்சியில், அவரது வீட்டில் வன்னியர் சங்க காலண்டர் இருப்பது போன்று, திட்டமிட்டே காட்சிப்படுத்தி உள்ளனர். உண்மையில் நடந்த நிகழ்வில் கொல்லப்பட்டவர் குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவரை அடித்து கொலை செய்ததாக, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் அந்தோணிசாமி என்ற தலித் கிறிஸ்துவர்.
ஆனால், உண்மையான குற்றவாளியின் ஜாதிய அடையாளத்தை மறைத்து, அவரை வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவராக காட்டி உள்ளனர். மேலும், அனைத்து கதாபாத்திரங்களுக்கும் உண்மையான பெயரே சூட்டப்பட்ட நிலையில், உதவி ஆய்வாளர் பெயரை மட்டும் குருமூர்த்தி என வைத்திருப்பதும், அவரை அடிக்கடி, 'குரு' என அழைத்திருப்பதும் அயோக்கியத்தனத்தின் உச்சம்.
அம்பேத்கரின் அழகிய குறியீட்டை தலைப்பாக வைத்துள்ள படக்குழுவினர், சம்பந்தப்பட்ட காட்சியை நீக்குவதுடன், வன்னியர்களை இழிவுபடுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காட்சி நீக்கம்
இந்நிலையில், சர்ச்சைக்குரிய வன்னிய சங்க காலண்டரை மாற்றி விட்டு, மகாலட்சுமி படம் அச்சிட்ட காலண்டரை காட்டியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE