பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: முதல்வர் பதவியின் மாட்சி!

Updated : நவ 07, 2021 | Added : நவ 07, 2021 | கருத்துகள் (81)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:கந்தவேல், நாகர்கோவிலில் இருந்து அனுப்பிய இ - மெயில் கடிதம்:இந்தியாவின் எதிரிகளான சீன அதிபர், பாகிஸ்தான் பிரதமர், ஆப்கானிஸ்தான் கொலை கூட்டமான தலிபான் தலைவன் ஆகியோருடன், நம் முதல்வரின் பெயரையும் சேர்த்து சமூக ஊடகத்தில் ஒரு பதிவு பார்த்தேன்; அதிர்ச்சியாகி படித்தேன்.'தீபாவளிக்கு
இது, உங்கள், இடம், ஸ்டாலின், தீபாவளி,  வாழ்த்துக்கள்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:



கந்தவேல், நாகர்கோவிலில் இருந்து அனுப்பிய இ - மெயில் கடிதம்:

இந்தியாவின் எதிரிகளான சீன அதிபர், பாகிஸ்தான் பிரதமர், ஆப்கானிஸ்தான் கொலை கூட்டமான தலிபான் தலைவன் ஆகியோருடன், நம் முதல்வரின் பெயரையும் சேர்த்து சமூக ஊடகத்தில் ஒரு பதிவு பார்த்தேன்; அதிர்ச்சியாகி படித்தேன்.

'தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத தலைவர்கள், இந்த நால்வர் தான்' என்று, யாரோ ஒருவர் எழுதி இருந்தார்.அந்த கொடியோரோடு, முதல்வர் ஸ்டாலினின் பெயரை சேர்த்ததில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் அப்படி விமர்சனம் செய்தவரின் மன வேதனையை என்னால் உணர முடிகிறது.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்லவில்லை என்பதற்காக, உலகில் எங்கேயும் தீபாவளி கொண்டாட்டம் சோடை போகவில்லை. கடந்த ஆண்டை காட்டிலும், இந்த தீபாவளி பல மடங்கு களைகட்டி இருந்தது உண்மை.நம் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்று, கட்சிக்காரர்கள் தான் கவலைப்பட வேண்டும்.

ஆனால் ஸ்டாலினை இப்போது, 'தி.மு.க., தலைவர்' என உலகம் அழைக்கவில்லை. 'தமிழக முதல்வர்' என்றே அவர் அறியப்படுகிறார். ஏழரை கோடி மக்களுக்கு, அவர் முதல்வர். அவருடைய விருப்பு, வெறுப்பு ஒவ்வொன்றும் அத்தனை மக்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.பதவிப் பிரமாணம் எடுக்கும் போதே, 'பாரபட்சமாக நடக்க மாட்டேன்' என்று உறுதி அளித்தவர், அதன்படி செயல்படுகிறாரா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு, தமிழக மக்களுக்கு இருக்கிறது.

'மத சார்பற்ற அரசு' என்ற பெயரால், எந்த மதத்தை குறித்தும் முதல்வர் ஸ்டாலின் எதுவும் பேசாமல் இருந்தால், எவரும் கேள்வி எழுப்ப போவது இல்லை. ஆனால் ஹிந்து மதத்தை மட்டும் உதாசீனம் செய்து, பிற மதங்களை கொண்டாடுவது எவராலும் ஏற்றுக் கொள்ள இயலாத ஒன்று!இது ஏதோ தவறுதலாக, எப்போதாவது நடக்கும் நிகழ்வு அல்ல. எப்போதும் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் அவமதிப்பு என்றே ஹிந்துக்கள் கருதுகின்றனர்.

'நாமும் ஓட்டு போட்டு தானே, இவரை முதல்வர் நாற்காலியில் அமர வைத்தோம்; பின் ஏன் இப்படி நம்மை மட்டும் எப்போதும் மட்டம் தட்டுகிறார்' என்ற கேள்வி, ஒவ்வொரு ஹிந்துவின் மனதிலும் உறைந்திருக்கிறது.'எவ்வளவு அடித்தாலும் ஹிந்துக்கள் தாங்குவர்' என்ற எண்ணத்தில் தொடர்ந்து செயல்படுவது முதல்வருக்கு அழகல்ல!


latest tamil news


'மற்ற மத பண்டிகைகளை போல, ஹிந்து பண்டிகைக்கும் வாழ்த்து சொன்னால், உங்களை திராவிட பாரம்பரியம் மற்றும் பகுத்தறிவு பாசறையில் இருந்து விலக்கி விடுவர்' என, யாராவது மூளைச்சலவை செய்துள்ளனரா என்று தெரியவில்லை.நமக்கு தெரிந்தது ஒன்று தான்... வகிக்கும் பதவிக்கு பொருத்தமாக நடந்து கொள்ள வேண்டியது, ஒவ்வொருவரின் கடமை. பல மதங்கள் உடைய நாட்டில், அனைவரையும் சமமாக பாவிப்பது ஆட்சியாளரின் மாட்சி.அந்த வழியில், ஹிந்துக்களையும் அரவணைத்து செல்ல வேண்டியது, முதல்வர் ஸ்டாலினின் பொறுப்பு.யார் என்ன சொல்வரோ என்ற பயத்தில் பொறுப்பை தட்டிக் கழிப்பது, கோழையின் மரபணு

.'கொள்கை, சித்தாந்தம், விருப்பு, வெறுப்பு எதுவாயினும் சரி, என் மக்களின் மகிழ்ச்சியே பிரதானம்' என்று நம்பும் மன்னனின் மாண்பு, முதலவர் ஸ்டாலினுக்கு வர வேண்டும்.மூகாம்பிகை கோவிலுக்கு செல்ல, எம்.ஜி.ஆர்., எவரிடமும் அனுமதி கோரவில்லை.

'ஆமாம், நான் பாப்பாத்தி தான்' என்று சட்டசபையில் முழங்க, ஜெயலலிதா தயங்கவில்லை.திருத்திக் கொள்ளுங்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களே... நீங்கள் இன்னும் போக வேண்டிய துாரம் அதிகம் இருக்கிறது. சுமைகளை இறக்கி வைத்தால், பயணம் சுகமாகும்.

Advertisement




வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Thanjavur,இந்தியா
07-நவ-202122:29:51 IST Report Abuse
Ram கண்டிப்பா தமிழகம் தலை தூக்கி நிற்கும் காலம் வரும்போது வாழ்த்து சொல்லுவார்.. இருளில் இருந்து இப்போ தான் மீட்கும் பணியில் அர்ப்பணித்து கொண்டுள்ளார் சற்று பொறுங்கள்
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
07-நவ-202120:28:18 IST Report Abuse
மலரின் மகள் அவரவர் நிறம் அப்படியே இருக்கட்டும். நிறம் மாறவேண்டாம். இந்துக்களின் பண்டிகை தினத்தை மிகவும் முக்கியமாக மனதில் இருக்கத்தி கொள்வார்கள். ஆழ்மனதில் ஒன்றை சொல்லிக்கொடு இருப்பார்கள் தவறுதலாக கூட நாம் வாழ்த்துக்களை தீபாவளிக்கு சொல்லிவிடக்கூடாது, பொங்கலுக்கு சொல்லிவிடக்கூடாது என்று மனதில் சொல்லி சொல்லி அதையே அசையிட்டு கொண்டிருப்பார்கள். ஒருவித மனப்பிராந்திய பிரச்சினை இருக்கும் என்று உளவியலில் சொல்லலாம். இத்துணை காலமாக இப்படி ஒருசிந்தனையை தந்தையை ஒட்டி எடுத்ததை மாற்றி விடாதே மனமே என்று சொல்லிக்கொண்டே இருப்பர் இவர் போன்றோர். இப்போது அதையே நாமும் தொடரவேண்டும் என்று இவரின் மகன். சிலதை மாற்றவோ நிமிர்த்தவோ திருத்தவோ முடியாது என்று சொல்லக்கூடாது, அதற்கு முயற்சிக்க கூடவே கூடாது. பொதுவெளியில் இப்படி அப்படி சொல்லியாவது எப்படியாவது இவர்களை வாழ்த்துக்கள் சொல்லவைத்து அதை வெற்றி என்று நினைக்கும் எண்ணத்தை சிலர் கொள்வதும் மனவியலாளான ஒரு குழப்பம் தான். தேவையற்றது இது. சகட்டு மேனிக்கு எல்லோரிடமும் வாழ்த்துக்களை பெற ஆசைகொள்ளக்கூடாது. வாழ்த்துபர்களுக்கு தகுதிகள் உண்டு. நமது ஆசிரியர்கள் மட்டுமே நம்மை வாழ்த்துவதற்கு தாய் தனத்தை மூத்தோர் ஆன்மீக பெரியார்களை தவிர்த்து நம்மை வாழ்த்துவதற்கு எப்போதும் சிறப்பை பெற்றவர்கள். அரசியல் வாதிகளின் வாழ்த்துக்களை நாடி செல்லவேண்டாமே?
Rate this:
Cancel
KavikumarRam - Indian,இந்தியா
07-நவ-202120:12:15 IST Report Abuse
KavikumarRam அந்நியமத ஒட்டுப்பிச்சை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X