அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கேரளாவின் நரித்தனம்; துணை போன தமிழகம்': அண்ணாமலை

Updated : நவ 07, 2021 | Added : நவ 07, 2021 | கருத்துகள் (53)
Share
Advertisement
'முல்லைப் பெரியாறு அணை நீரை திறந்து விட்டு, தமிழ் இனத்துக்கே துரோகம் இழைத்து படுபாதக செயலை தி.மு.க., அரசு செய்துள்ளது,'' என்று கொந்தளிக்கிறார் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை.அவர் அளித்த பேட்டி:தமிழுக்காக வாழ்கிறோம், தமிழர் நலனுக்காகஉழைக்கிறோம் என மூச்சுக்கு 300 முறை தமிழர் வாழ்வு, தமிழர் நலன் பற்றி அக்கறைப்படுவதாக கூறும் தி.மு.க., தலைமை, காலம் காலமாக தமிழர்களை

'முல்லைப் பெரியாறு அணை நீரை திறந்து விட்டு, தமிழ் இனத்துக்கே துரோகம் இழைத்து படுபாதக செயலை தி.மு.க., அரசு செய்துள்ளது,'' என்று கொந்தளிக்கிறார் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை.latest tamil news


அவர் அளித்த பேட்டி:தமிழுக்காக வாழ்கிறோம், தமிழர் நலனுக்காகஉழைக்கிறோம் என மூச்சுக்கு 300 முறை தமிழர் வாழ்வு, தமிழர் நலன் பற்றி அக்கறைப்படுவதாக கூறும் தி.மு.க., தலைமை, காலம் காலமாக தமிழர்களை ஏமாற்றும் வேலையைத் தான் செய்து வருகிறது. அப்படி நடந்ததில், 'லேட்டஸ்ட்' விஷயம் தான் முல்லைப் பெரியாறு அணையை திறந்து விட்டது.

அணையின் பராமரிப்பு தமிழகத்திடம் உள்ளது. ஆனால், கேரள அமைச்சர்கள் இருவர் மற்றும் அதிகாரிகள் சென்று, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, அணை தண்ணீரை திறந்துள்ளனர்.'முல்லைப் பெரியாறு அணை திறப்பு தொடர்பாக, தமிழக அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது' என்று, கேரள முதல்வர் பினராயி விஜயன் தெளிவாகக் கூறுகிறார். 'தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதினோம். அனுமதி வந்த பின்பே திறக்கப்பட்டது' என்றும் சொல்கிறார்.


கனவு பலிக்காது

ஆனால், தமிழக அரசு எதுவுமே தெரியாதது போலவும், கேரளா அத்துமீறி வந்து அணையை திறந்து விட்டது போலவும் நாடகம் ஆடுகிறது. எல்லாரும் அமைதியாக இருப்பது போல, பா.ஜ., அமைதியாக இருந்து விடும் என முதல்வர் ஸ்டாலின் நினைத்தால், அது தவறு. கேரளாவின் நரி தந்திரத்துக்கு பலியாகி, நம் உரிமையை இழந்து நிற்பதை ஏற்க முடியாது. தி.மு.க., அரசு நாடகமாடுவதில் பின்னணி உள்ளது. 2024 லோக்சபா தேர்தலுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளோடு கைகோர்த்து, மூன்றாவது அணி அமைத்து போட்டியிட தி.மு.க., விரும்புகிறது.


latest tamil news


மூன்றாவது அணி துணையுடன் மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சி சார்பில், பிரதமர் தேர்வு இருக்கும் பட்சத்தில், தி.மு.க.,விலிருந்து ஸ்டாலினை, துணை பிரதமராக்க திட்டம் போட்டு உள்ளனர். அதற்காக, கேரளாவில் இருக்கும் கம்யூனிஸ்ட் அரசுக்கு, அணையை திறக்க உதவி உள்ளனர். இது தான் நடந்தது. ஆனால், 2024 மட்டுமல்ல; 2048 ஆனாலும், தி.மு.க., கனவு பலிக்காது; பலிக்கவும் விட மாட்டோம். தமிழகத்தை ஏற்கனவே ஆண்ட மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், நம் உரிமையை துளி கூட விட்டுக் கொடுத்ததில்லை.


999 ஆண்டுகள் ஒப்பந்தம்

இப்படித்தான் 1979ல் குஜராத்தில் இருந்த ஒரு அணை உடைந்து, மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். அதை வைத்து, இடுக்கி மாவட்ட மக்கள் துாண்டுதலில், முல்லைப் பெரியாறு அணையை மையமாக வைத்து, தமிழர்களுக்கு எதிரான போராட்டம் நடந்தது. அதையடுத்து, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., கேரளாவுக்கு சென்று பேச்சு நடத்தினார். அணைக்கு அருகில் பெரும் தடுப்புச் சுவர் கட்டலாம் என யோசனை கூறப்பட்டு, அதை கேரளாவும் ஏற்றது. தடுப்புச்சுவர் கட்ட, கேரளாவுக்கு 25 கோடி ரூபாயை எம்.ஜி.ஆர்., கொடுத்தார். அதன்பின், மிகவும் பாதுகாப்பான அணையாக அது இருக்கிறது. தமிழகத்துக்கு நிரந்தரமாக தண்ணீர் தர வேண்டும் என்பது தான், அப்போது போடப்பட்ட ஒப்பந்தம். 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் அது. நிரந்தரம் என்பதை தான், எண்ணால் 999 ஆண்டுகள் என குறிப்பிட்டிருக்கின்றனர்.

அணையில் திறக்கப்படும் நீரின் ஒரு பகுதியை,கேரளாவுக்கும் தர சம்மதம் தெரிவிக்கப்பட்டது. கேரளாவுக்கு திறந்து விடப்படும் நீர் முழுதும் கடலுக்கு சென்றது.அந்த சமயத்தில் தான், கேரள பொறியாளர் முரளீதரன் நாயர், இடுக்கியில் தடுப்பணை கட்டி, அதில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்று யோசனை கூறினார். அதை, இரு மாநிலங்களும் ஏற்றன


.மின்சாரம் விற்பனை

அதற்காக, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து, 21 டி.எம்.சி., நீர் கேரளாவுக்கு தரவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.அதிலிருந்து 750 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் பணியை, இன்றளவிலும் கேரள அரசு செய்து வருகிறது. இந்த மின்சாரத்தை, ஆந்திராவுக்கு விற்று காசாக்குகின்றனர். ஒப்பந்தப்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை, 152 அடியாக உயர்த்தியாக வேண்டும். ஆனால், 136 அடிக்கு மேல் நீர்மட்டம் இருக்குமானால், இடுக்கியில் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்படும் என்பதால், அதை தடுக்கும் முயற்சியில் கேரளா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இப்போது கூட, நவம்பர் 10 வரை 138.6 அடியாக நீர்மட்டம் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அப்படி இருக்கையில், 136 அடி இருக்கும் போதே, திருட்டுத்தனமாக கேரள அரசு அணையை திறந்துள்ளது. இதற்கு, தமிழக அரசும் துணை போய் இருக்கிறது. நடந்தது நீதிமன்ற அவமதிப்பு செயல். அதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைக்கும் தமிழக பா.ஜ., தயாராகிறது. அணை விவகாரத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், கேரளாவுக்கு ஆதரவாக 'ட்விட்' போடுகிறார். அணையின் நீர்மட்டம் 136 அடியை தாண்டினால், அணை உடைந்து விடுமாம். இவரின் அபூர்வ கண்டுபிடிப்புக்கு பின்னணியில், 'ரிசார்ட் லாபி' உள்ளது


latest tamil news


.'ரிசார்ட்'கள் மூழ்கும்இடுக்கி பகுதியில் ஏகப்பட்ட 'ரிசார்ட்'களை கட்டி விட்டனர். அணையின் நீர் மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தினால், இடுக்கி பகுதியில் உள்ள ரிசார்ட்கள், தண்ணீரில் மூழ்கி விடும். அதனால், ரிசார்ட் அதிபர்கள் ஒன்று சேர்ந்து, பிருத்விராஜ் சுகுமாரனிடம், தங்களுக்கு சாதகமானதகவலை பரப்ப கேட்டு உள்ளனர். இதன் பின்னணியில் பெரும் வியாபாரம் இருக்கிறது. இவற்றை அம்பலப்படுத்தும் விதமாகத் தான், முல்லைப் பெரியாறு அணை கட்டிய பெருமக்கள் வாழ்ந்த தேனி, வாடிப்பட்டி, கம்பம் பகுதிகளில் இருக்கும் மக்களை திரட்டி போராட்டம் அறிவித்துள்ளோம். இந்த பிரச்னையை யார் விட்டாலும், தமிழக பா.ஜ., விடாது. இவ்வாறு அவர் கூறினார்.

'செய்ய வைப்போம்'-அண்ணாமலை கூறியதாவது: மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என தி.மு.க., கரடியாக கத்தியது. ஆனால், இன்று பிரதமர் மோடி, பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய், டீசலுக்கு 10 ரூபாய் என குறைத்துள்ளார். அதை தொடர்ந்து, பா.ஜ., மற்றும்கூட்டணி கட்சியினர் ஆளும் மாநிலங்கள், பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளன.பெட்ரோல், டீசல் விலையை மற்ற மாநிலங்களை போல, தமிழக அரசும் குறைக்க வேண்டும். அதை உடனடியாக செய்ய வேண்டும். இல்லைஎன்றால், தமிழக பா.ஜ., செய்ய வைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் --

Advertisement
வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathish - Coimbatore ,இந்தியா
08-நவ-202101:48:20 IST Report Abuse
Sathish இப்படி பேசி தமிழ்நாட்டில் இருக்கும் கொஞ்சநஞ்ச மதிப்பையும் கெடுத்துக்கொள்வார்கள் பிஜேபி.
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
07-நவ-202116:17:02 IST Report Abuse
pattikkaattaan ஏற்கெனவே ஒருவர் "தாமரை மலர்ந்தே தீரும்" னு திரும்ப திரும்ப சொல்லி ஆளுநர் பதவி வாங்கியாச்சு ... வேலை எடுத்துட்டு ஊர்வலம் போயி இன்னொருத்தர் மத்திய இணை அமைச்சர் பதவி வாங்கியாச்சு ... அண்ணாமலை சார் நீங்க விட்றாதீங்க .. இன்னும் கொஞ்சம் பலமா போராடுங்க ... நமக்கு பதவி முக்கியம் ..
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
08-நவ-202106:16:35 IST Report Abuse
NicoleThomsonஎப்படி பிகாரி பிராமணன் கூட்டிட்டு வந்து பதவிக்கு அலைந்தது போலவா? அவ்ளோ ஆசை இல்லைன்னா பிகாரி காரன் போட்ட பிச்சையை தூக்கி போட்டுட்டு தேர்தலை சந்தித்திருக்க வேண்டும்...
Rate this:
Cancel
jeyakumar - MADURAI,இந்தியா
07-நவ-202114:43:08 IST Report Abuse
jeyakumar திரு அண்ணாமலை அவர்கள் ஒவ்வொரு பிரச்சனையிலும் மிகத்தெளிவாக ஆராய்ந்து அருமையாக விளக்கம் அளிக்கிறார். மற்ற அரசியல்வாதிகளைப்போல் ஏனோதானோ என்று பேசுவதில்லை. ஆனால் இன்னும் அடித்தள மக்கள் பலபேர் தமிழக பத்திரிகைகள், டிவி சானல்கள், பேப்பர் கடை வால் போஸ்டர்கள் கூறுவது அனைத்தும் உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். நேர்மையும், புத்திசாலித்தனமும், கடுமையான உழைப்பும் கொண்ட திரு அண்ணாமலை அவர்கள் முயற்சியால் தமிழக மக்கள் உண்மையை விரைவில் உணர்வார்கள்.
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
08-நவ-202106:19:20 IST Report Abuse
NicoleThomsonதமிழ் நாட்டில் ஒரு வினோதமான மூடநம்பிக்கை உண்டு ஐயா , படித்தவர்களை படிக்காதவர்கள் ஆளும் மாநிலமாக இருப்பது அதன் தலைவிதி , புடவை உருவி அது மறந்து விட கூடாது என்று அருவி பிராண்டு நடத்துவதும் தமிழ் காப்பாளராகள் சன் பிராண்டு நடத்துவதும் முரணாக படவே படாது . அதற்கு உறுதுணையாக இருநூறு வாங்கிக்கொண்டு மாரடிக்கும் படிப்பாளிகள் கூட்டமும் தமிழ்நாட்டில் உண்டு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X