ராணுவ தொழில்நுட்ப உதவி; இந்தியாவுக்கு பிரான்ஸ் உறுதி

Updated : நவ 07, 2021 | Added : நவ 07, 2021 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி : இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில், ராணுவத் துறையில் இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக பிரான்ஸ் கூறியுள்ளது.இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் இடையேயான ராணுவ உறவு தொடர்பான ஆண்டு கூட்டம் பாரிசில் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனின்


புதுடில்லி : இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில், ராணுவத் துறையில் இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக பிரான்ஸ் கூறியுள்ளது.



latest tamil news



இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் இடையேயான ராணுவ உறவு தொடர்பான ஆண்டு கூட்டம் பாரிசில் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனின் வெளிநாட்டு ஆலோசகர் இமானுவல் போன்னியை, நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சந்தித்து பேசினார்.

அதைத் தொடர்ந்து பாரிசில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:பிரதமர் நரேந்திர மோடியின் 'ஆத்மநிர்பர் பாரத்' எனப்படும் சுயசார்பு இந்தியா கொள்கை மற்றும் இந்தியாவின் ராணுவ தளவாடத் தொழில் உற்பத்தியை ஊக்குவிக்க அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக பிரான்ஸ் கூறியுள்ளது.


latest tamil news


இதற்கு தேவையான ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் முழுமையாக பங்கேற்பதாக கூறியுள்ளது.இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் தன் உறுதியை நிறைவேற்றும் வகையில், இந்தப் பிராந்தியத்தின் மிக முக்கிய நட்பு நாடான இந்தியாவுடன் ராணுவத் துறையில் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் பிரான்ஸ் கூறியுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-நவ-202121:09:52 IST Report Abuse
அப்புசாமி ரஃபேல் ஆர்டர் எல்லாம் பட்டுவாடா பண்ணி முடிச்சாச்சு. அடுத்த ஆர்டர் வந்தாத் தானே ஃப்ரான்சின் ஆத்மநிர்பரா நல்லாப் போகும். நம்மகிட்டேயிருந்து கொஞ்சம் லேகியம் இறக்குமதி பண்ணிப்பாங்க.
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
07-நவ-202111:35:52 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN தொழில்நுட்ப உதவி "மேக் இன் இந்தியா" திட்டத்தின் அடையாளம்
Rate this:
Cancel
07-நவ-202110:28:57 IST Report Abuse
அப்புசாமி ஐயய்யோ... ஆத்மநிர்பரா என்ன ஆவுறது? ஏற்கனவே ஆஸ்திரேலியா ஃப்ரான்சுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. ஏனென்றால் அது பழைய டெக்னாலஜியாம். அந்த ஓட்டை உடைசலை இங்கே தள்ளிடப் பாக்கறாங்களோ என்னவோ?
Rate this:
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
07-நவ-202114:21:37 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANஉன் அறிவே அறிவு எதை வாங்கப்போறாங்க, எது பழைய டெக்னலாஜி இதெல்லாம் தெரிஞ்சுக்காமே கருத்து போடுறியே ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X