இந்தியாவில் இதுவரை தடுப்பூசி 'டோஸ்' 108 கோடி; லட்சத்தீவில் 99.2 சதவீதம்

Updated : நவ 07, 2021 | Added : நவ 07, 2021 | |
Advertisement
புதுடில்லி : நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 108 கோடியை கடந்துள்ளது.லட்சத்தீவில் 99.2 சதவீதம் பேருக்கு இரு டோஸ் செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறைந்தபட்சம்கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து வேகமாக நடக்கின்றன. இதில் பின்தங்கியுள்ள மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் பணிகளை விரைவுபடுத்த


புதுடில்லி : நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 108 கோடியை கடந்துள்ளது.



latest tamil news


லட்சத்தீவில் 99.2 சதவீதம் பேருக்கு இரு டோஸ் செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறைந்தபட்சம்கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து வேகமாக நடக்கின்றன. இதில் பின்தங்கியுள்ள மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என, சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் இரவு 7:00 மணி வரை 27 லட்சம் 'டோஸ்' தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருந்தன. இதன் வாயிலாக, இதுவரை செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 108.19 கோடியை கடந்துள்ளது.இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று வரை 108.19 கோடிக்கும் அதிகமான டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.

நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 78.7 சதவீதம் பேர், குறைந்தபட்சம் முதல் டோஸ் செலுத்தி உள்ளனர். முழுமை அடையும்யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் 99.2 சதவீதம் பேருக்கு இரு டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது. இது, ஓரிரு நாட்களில் முழுமை அடையும். கோவா, ஹிமாச்சல பிரதேசம், சிக்கிம், உத்தரகண்ட் மாநிலங்கள் மற்றும் ஜம்மு - காஷ்மீர், அந்தமான் - நிக்கோபார் தீவுகள், சண்டிகர் ஆகிய யூனியன் பிரதேசங்களில் அனைவரும் முதல் டோஸ் பெற்றுள்ளனர்.


latest tamil news


நாட்டில் 18 வயது கடந்த 94 கோடி பேரில், 36 சதவீதத்திற்கும் மேலானோர் இரு டோஸ் செலுத்தி உள்ளனர். அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி டோஸ் செலுத்திய மாநிலங்கள் பட்டியலில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் அடுத்தடுத்த இடங்களை பிடித்து உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X