சென்னையில் விடிய விடிய கனமழை

Updated : நவ 07, 2021 | Added : நவ 07, 2021 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை: வங்கக் கடலில் தமிழக கடற்கரை ஒட்டிய பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை கொட்டி வருகிறது.இந்நிலையில் நேற்று (நவ.,06) இரவு முழுவதும் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளி்ல் கனமழை கொட்டித் தீர்த்தது. விடிய விடிய பெய்த கனமழை காரணமாக நகரின் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது. சென்னையில் மிக கனமழை

சென்னை: வங்கக் கடலில் தமிழக கடற்கரை ஒட்டிய பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை கொட்டி வருகிறது.



latest tamil news




சென்னையில் விடிய விடிய பலத்த மழை பெய்ததால் சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்குட்பட்ட சிவாஜி நகர்,அஜீஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் தரைத்தளத்தில் வசிப்பவர்கள் முதல் தளத்துக்கு மாறுகின்றனர். சாலையில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ஓடுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. மழைக்காலம் தொடங்கும் முன்பே மாநகராட்சி நிர்வாகம் வடிகால் பணிகளை முறையாக செய்திருந்தால் மழைநீர் தேங்காமல் பக்கிங்காம் கால்வாயை அடைந்திருக்கும்; அதிகாரிகளின் மெத்தனத்தால் நாங்கள் கஷ்டப்படுகிறோம் என ஆர்கேநகர் பகுதி மக்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர். முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் உள்ள கண்ணகி நகர் பூம்புகார் நகர் சிவசக்தி நகர் காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. சில இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாயினர். #ChennaiRain #HeavyRain #ChennaiFloodVideo

இந்நிலையில் நேற்று (நவ.,06) இரவு முழுவதும் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளி்ல் கனமழை கொட்டித் தீர்த்தது. விடிய விடிய பெய்த கனமழை காரணமாக நகரின் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது. சென்னையில் மிக கனமழை நீடீக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது,

அதிகபட்சமாக இதுவரை வில்லிவாக்கத்தி்ல் 16 செ.மீ மற்றும் நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. மேலும் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடபழனி, அசோக் நகர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


latest tamil news




நேற்றிரவு முதல் தமிழகத்தில் மதுரை, தஞ்சை, விழுப்புரம் , சேலம், திண்டுக்கல், கரூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்தன.

விழுப்புரத்தில் வீடுகளுக்குள் வெள்ள நீர் பகுந்தது. சேலம் அருகே தரைப்பாலம் மூழ்கியதால் 3 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arul selvaraj - Sivakasi ,இந்தியா
07-நவ-202119:59:42 IST Report Abuse
Arul selvaraj சென்னைக்கு பிழைக்க கூட்டம் கூட்டமாக போனீங்கள்ல அனுபவிங்க. சென்னையில் துவங்கிய தொழில் வளர்ச்சியை பரவலாக தென்மாவட்டங்களிலும் செய்திருந்தால் சென்னையில் இவ்வளவு மக்கள் அடர்த்தி இருக்காது, இந்த பிரச்சினையும் இருக்காது
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
07-நவ-202113:06:04 IST Report Abuse
Ramesh Sargam மழை வந்து பாதிப்பு ஏட்பட்டபிறகு முதல்வர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று 'நாடகம்', மழை சேதங்களை பார்வையிடுவதற்கு பதில், மழை பெய்ய ஆரம்பிக்கும் முன்பே, அதாவது மழை காலம் ஆரம்பிப்பதற்கு முன்பே, சென்று நேரில் ஆய்வு செய்து, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால், இன்று இந்த 'நாடக விசிட்' செய்வது தேவை பட்டிருக்காது. மக்களுக்கு வோட்டு போடுவதற்கு மட்டும்தான் 'அதிகாரம்'. ஆனால், ஆட்சி அமைத்தபிறகு அவர்களை நாம் ஒன்றும் கேட்க கூடாது. அறிவுரை செய்வது முற்றிலும் கூடவே கூடாது... வெட்கம் வேதனை
Rate this:
Cancel
07-நவ-202110:17:37 IST Report Abuse
அப்புசாமி கடந்த 50 ஆண்டுகளாக மக்கள் பணத்தை விழுங்கி ஏப்பம்விட்டு மக்களுக்கு அடிபடை வசதிகள் கூட செய்யாத கூத்தாடி முன்னேற்ற கழக ஆட்சிகள் தான் காரணம் என்று அதிகாரிகள் தெரிவிக்க ஆசைதான்.ஆனா, அவிங்களும் ஆட்சியாளர்களோடு சேர்ந்து ஆட்டையப் போட்டது தான் அடுத்த காரணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X