வாலிபரை தாக்கி வழிப்பறி வியாசர்பாடி நபர்கள் கைது

Added : நவ 07, 2021 | |
Advertisement
எம்.கே.பி.நகர் : வியாசர்பாடியில் வாலிபரை தாக்கி மொபைல் போன் பறித்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.வியாசர்பாடி, மூர்த்திங்கர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கார்த்திக், 25. இவர், வடபெரும்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார்.இவரது வீட்டின் அருகே, நேற்று முன்தினம் வந்த மர்ம நபர்கள் இருவர், மொபைல் போன் கேட்டுள்ளனர்.கார்த்திக் தர மறுக்கவே, பீர்

எம்.கே.பி.நகர் : வியாசர்பாடியில் வாலிபரை தாக்கி மொபைல் போன் பறித்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.

வியாசர்பாடி, மூர்த்திங்கர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கார்த்திக், 25. இவர், வடபெரும்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார்.இவரது வீட்டின் அருகே, நேற்று முன்தினம் வந்த மர்ம நபர்கள் இருவர், மொபைல் போன் கேட்டுள்ளனர்.கார்த்திக் தர மறுக்கவே, பீர் பாட்டிலால் தலையில் தாக்கி மொபைல் போனை பறித்து சென்றனர்.

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த கார்த்திக், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இது குறித்து எம்.கே.பி., நகர் போலீசார் விசாரித்தனர்.இதில், வியாசர்பாடி, பாரதி நகரைச் சேர்ந்த அஜித் குமார், 20, மற்றும் எழிலரசன், 22, ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.நேற்று இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X