இந்தியாவின் தோல்வியை கொண்டாடிய மனைவி மீது கணவர் காவல்நிலையத்தில் புகார்

Updated : நவ 07, 2021 | Added : நவ 07, 2021 | கருத்துகள் (5)
Advertisement
ராம்பூர்: உ.பி.,யில் இந்தியாவின் தோல்வியை கொண்டாடிய மனைவிமீது கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.சமீபத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்து முடிந்த டுவென்டி-20 போட்டி நாளுக்கு நாள் பல்வேறு விதமான பிரச்னைகளையும் வழக்குகளையும் சந்தித்து வருகிறது. கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி நடந்து முடிந்த உலக கோப்பை டுவென்டி-20 போட்டியில் இந்தியாவின் தோல்வியை

ராம்பூர்: உ.பி.,யில் இந்தியாவின் தோல்வியை கொண்டாடிய மனைவிமீது கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



latest tamil news


பாக் வெற்றிக்கு ஸ்டேட்டஸ் மனைவி மீது கணவன் புகார் | India vs Pakistan T20 | Winning Celebration | Dinamalar |

சமீபத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்து முடிந்த டுவென்டி-20 போட்டி நாளுக்கு நாள் பல்வேறு விதமான பிரச்னைகளையும் வழக்குகளையும் சந்தித்து வருகிறது. கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி நடந்து முடிந்த உலக கோப்பை டுவென்டி-20 போட்டியில் இந்தியாவின் தோல்வியை ஜம்மு-காஷ்மீரில் உள்ள மருத்துவ பயிலும் மாணவர்கள் சிலர் கொண்டாடியதாக அவர்கள்மீது வழக்கு பதியப்பட்டது. இது அம்மாநிலத்தில் முன்னதாக சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர்களது கைதுக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல தற்போது உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர் அஸீம் நகர் பகுதியிலுள்ள இஷான் மியா என்பவர், தனது மனைவி ராபியா ஜான்சிமீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்து வாழும் ராபியா தனது சகோதரர்களுடன் இணைந்து டுவென்டி-20 உலக கோப்பை போட்டியில் இந்தியாவின் தோல்வியை கொண்டாடியதாக இஷான் குற்றஞ்சாட்டியுள்ளார்.


latest tamil news



இதனையடுத்து கஞ்ச் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவான 67-ன் படி ராபியாமீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
07-நவ-202109:42:52 IST Report Abuse
செல்வம் எவனும் நல்லவன் கிடையாது ஏற்கனவே சண்டை பிரிந்து வாழராங்க அதனால அட்டகத்தி போட்டு கொடுத்திருக்கு அவ்வளவுதான்
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
07-நவ-202109:27:51 IST Report Abuse
 N.Purushothaman தேசப்பிதாவின் இஸ்லாமிய பற்றால் இந்தியா அனுபவிக்கும் கஷ்டங்கள் இன்றும் தொடர்கிறது .....
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
07-நவ-202109:26:57 IST Report Abuse
 N.Purushothaman பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமியர்களை அந்நாட்டிற்கு குடி பெயர இந்த இந்தியா வாய்ப்பு கொடுப்பது நல்லது .....அப்படி செய்தாலே பல உள்நாட்டு துரோகிகள் அமைதியடைவார்கள் அல்லது அங்கு செல்வார்கள் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X