4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை

Updated : நவ 07, 2021 | Added : நவ 07, 2021 | கருத்துகள் (25)
Advertisement
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.எழும்பூர் மற்றும் வட சென்னையில் உள்ள பெரம்பூர், ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு முதல்வர் சென்றார். அவருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என் நேரு, தலைமை செயலர் இறயைன்பு, டி.ஜி.பி.,
ChennaiRains, Chennai,rain,சென்னை,மழை

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


சென்னையில் நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது. விடிய விடிய மழை பெய்ததால் சென்னையின் பல சாலைகள் வெள்ளக் காடானது. குறிப்பாக பெரம்பூர், கொளத்தூர், திருவிக நகர், ஆர்கேநகர் என பல பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். வேப்பேரி, புரசைவாக்கம், எழும்பூர், பெரம்பூர், பட்டாளம், பாடி மேம்பாலம், அயனாவரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கொட்டும் மழையில் ஆய்வு மேற்கொண்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரண முகாம்களுக்கும் சென்று பார்த்தார். மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முதல்வருடன் அமைச்சர் சேகர்பாபு தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் சென்றனர்.

latest tamil newsஎழும்பூர் மற்றும் வட சென்னையில் உள்ள பெரம்பூர், ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு முதல்வர் சென்றார். அவருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என் நேரு, தலைமை செயலர் இறயைன்பு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் உடன் சென்றனர். மழை பாதிப்பு மற்றும் மீட்பு பணிகளை முதல்வர் ஆய்வு செய்ததுடன், மக்களின் குறைகளை கேட்டார்.
இதன் பின்னர் எழிலகத்தில் மாநில கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி:சென்னையில் கடும் மழை கொட்டி தீர்த்ததால் சில இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டள்ளன. சென்னையில் தேசிய பேரிடர் மீட்பு படை வரவழைக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மின்கம்பங்கள், குழிகள் சரி செய்ய மின்துறை, உள்ளாட்சி நெடுஞ்சாலை துறைக்கு அறிவுறுத்தி உள்ளேன். தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மக்களை கேட்டு கொள்கிறேன். சென்னை மாநகராட்சி பணியாளர்கள் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். மழையை, எதிர்கொள்ள அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.
பொது மக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு அடுத்த 2 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்து கொள்ளலாம். வெளியூர் சென்று சென்னை திரும்புபவர்கள், தங்களது பயணத்தை இன்னும் 2, 3 நாட்கள் ஒத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.தி.மு.க.,வினருக்கு உத்தரவு


latest tamil news


இதனிடையே, மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, அதிகாரிகளுடன் இணைந்து உதவி மற்றும் நிவாரண உதவிகளை செய்ய வேண்டும் என தி.மு.க., எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-நவ-202121:01:36 IST Report Abuse
Radhakrishnan துக்ளக் தர்பார் 😂🤣
Rate this:
Cancel
LAX - Trichy,இந்தியா
07-நவ-202119:41:30 IST Report Abuse
LAX செம கமெண்ட்.. Mr. வீரமணி ஷங்கர்.. 👌🏽 👌🏽
Rate this:
Cancel
07-நவ-202118:48:22 IST Report Abuse
ஆரூர் ரங் படத்தில் ஸ்டாலினுக்கு 😎மட்டுமே ரெய்ன் கோட் சமத்துவத்தின் சாராம்சம். 🤕 அடிமைத்தனத்தின் அடையாளம்.
Rate this:
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
07-நவ-202121:17:22 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANதமிழ் சினிமாவில் ஹீரோ உடையினால் தனியாகத் தெரிவார் அப்படியும் நாம் வேறு யாரையும் ஹீரோவாக நினைத்துவிடக் கூடாது என்பதால் சேட்டைகள் செய்து கொண்டே இருப்பார்...
Rate this:
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
07-நவ-202121:23:02 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANஅதென்ன அவருக்கு மட்டும் ரெயின் கேப் (மழைக்கு குல்லா) என்று பலர் கேட்டிருக்கீங்க இது அநியாயம் தலைமுடி சாயம் மழை நீரில் (மழை நீர் பெரிய நகரங்களில் தூய்மையாக இருக்காது அதில் செறிவு குறைந்த நைட்ரிக் அமிலம் இருக்கலாம்) கரைந்து வெள்ளை சட்டையில் கரை ஏற்படுத்திவிட்டால் நீங்கள் பொறுப்பு ஏற்றுக்கொள்வீர்களா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X