நெரிசல் இன்றி பாஸ்டேக்கில் கடந்த வாகனங்கள்

Added : நவ 07, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி : தீபாவளி பண்டிகையைக் கொண்டாட தென்மாவட்டங்களுக்குச் சென்றவர்கள் 'பாஸ்டேக்' வசதி காரணமாக, போக்குவரத்து நெரிசலின்றி எளிதாக டோல் பிளாசாவைக் கடக்க முடிந்தது.தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இருந்து சென்னையில் பணிபுரிபவர்கள் தங்கள் சொந்த ஊரில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட 2 நாட்களுக்கு முன்னதாகவே பைக், கார், வேன், பஸ்களில் புறப்படுவது வழக்கம். கடந்த 2

விக்கிரவாண்டி : தீபாவளி பண்டிகையைக் கொண்டாட தென்மாவட்டங்களுக்குச் சென்றவர்கள் 'பாஸ்டேக்' வசதி காரணமாக, போக்குவரத்து நெரிசலின்றி எளிதாக டோல் பிளாசாவைக் கடக்க முடிந்தது.
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இருந்து சென்னையில் பணிபுரிபவர்கள் தங்கள் சொந்த ஊரில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட 2 நாட்களுக்கு முன்னதாகவே பைக், கார், வேன், பஸ்களில் புறப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் டோல் பிளாசாவைக் கடந்து செல்லும் போது வாகன போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். சில நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்.

மத்திய அரசு, போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்க்கும் வகையில் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதி முதல் பாஸ்டேக் வசதியை அறிமுகப்படுத்தி, டோல் பிளாசாவில் இவ்வசதியுடைய வாகனங்கள் எளிதாக கடக்க வழிகள் ஏற்படுத்தப்பட்டது.கடந்த ஆண்டின் போது 65 சதவீத வாகனங்கள் மட்டுமே பாஸ்டேக்கிற்கு மாறியிருந்ததால் சிறிது நேரம் டோல் பிளாசாவில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்தாண்டு ஜனவரி மாதத்தில் முழுமையாக பாஸ்டேக் வசதி அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது, 97 சதவீதத்தினர் தங்களின் எளிதான பயணத்திற்காக வாகனங்களில் பாஸ்டேக் வசதியை ஏற்படுத்தியுள்ளனர். மீதமுள்ள 3 சதவீத வாகனங்களில் 2 சதவீத வாகனங்கள் அரசு துறையைச் சேர்ந்த வாகனங்களும், ஒரு சதவீதம் பொதுமக்கள் இன்னும் பாஸ்டேக் திட்டத்திற்கு மாறாமல் உள்ளனர்.
இந்தாண்டு தீபாவளி பண்டிகையைக் கொண்டாட தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சென்னையில் இருந்து கடந்த 1ம் தேதி முதல் பயணிக்கத் துவங்கினர். இதனால், சாலைகளில் போக்குவரத்து மிகுந்து காணப்பட்டது. ஆனால், பாஸ்டேக் வசதியிருந்ததால் டோல் பிளாசாவை வாகனங்கள் நிற்காமல் எளிதாக கடந்து சென்றன.

விக்கிரவாண்டி டோல் பிளாசாவை கடந்த 1ம் தேதி 24 ஆயிரம், 2ம் தேதி 29 ஆயிரம், 3ம் தேதி 36 ஆயிரம், தீபாவளி பண்டிகை அன்று காலை 8:00 மணி வரை 13 ஆயிரம் வாகனங்கள் என மொத்தம் 95 ஆயிரம் வாகனங்கள் தென்மாவட்டங்களை நோக்கிச் சென்றுள்ளன. இதில் வணிக போக்குவரத்து வாகனங்களும் அடங்கும்.தீபாவளி பண்டிகை முடிந்து கடந்த 5ம் தேதி முதல் சென்னைக்குத் திரும்பத் துவங்கியுள்ளனர்.

கடந்த 5ம் தேதி 18 ஆயிரம் வாகனங்கள் சென்னை நோக்கி சென்றன. நேற்று மாலை 6:00 மணி வரை 21 ஆயிரத்து 200 வாகனங்கள் டோல் பிளாசாவை கடந்து சென்றன. கடந்த ஆண்டைவிட 2 சதவீத வாகன போக்குவரத்து அதிகரித்து இருந்தாலும் பாஸ்டேக் திட்டத்தினால் போக்குவரத்து நெரிசலின்றி எளிதாக சென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X