சென்னை மிதக்கிறது

Updated : நவ 07, 2021 | Added : நவ 07, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் சென்னை மழை நீரில் மிதப்பதை அதிகாரிகளால் தடுக்கவோ தவிர்க்கவோ முடியவில்லை என்பதுதான் நிஜம்.கடந்த ஒரு மாதமாகவே அமைச்சர்களும், அதிகாரிகளும் நவம்பர் மாத மழையை சமாளிக்க தயராக இருக்கிறோம், நதிகளை துார் வாரிவிட்டோம்,முகத்துவார அடைப்புகளை நீக்கிவிட்டோம், போக்கிடங்களை சுத்தம் செய்துவிட்டோம் என்றெல்லாம்latest tamil newsபல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் சென்னை மழை நீரில் மிதப்பதை அதிகாரிகளால் தடுக்கவோ தவிர்க்கவோ முடியவில்லை என்பதுதான் நிஜம்.latest tamil newsகடந்த ஒரு மாதமாகவே அமைச்சர்களும், அதிகாரிகளும் நவம்பர் மாத மழையை சமாளிக்க தயராக இருக்கிறோம், நதிகளை துார் வாரிவிட்டோம்,முகத்துவார அடைப்புகளை நீக்கிவிட்டோம், போக்கிடங்களை சுத்தம் செய்துவிட்டோம் என்றெல்லாம் அறிவித்தனர்,அனைத்தையும் பொய்யாக்கிவிட்டு மழை சென்னை மக்களை தவிக்கவிட்டுள்ளது.latest tamil news


Advertisement


முதல்வர் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து மக்களிடம் குறைகளை கேட்கிறார் அவர் மட்டுமே ‛மாஸ்க்' அணிந்திருக்கிறார் கூடவரும் அமைச்சர்களும் அதிகாரிகளும் அதெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துவிட்டனர் போலும்.latest tamil news‛அண்ணாத்தே' பட விளம்பரங்களுக்கு நடுவே காட்டப்பட்ட செய்திகளில் அணைகள் மதகுகள் எல்லாம் நிரம்பிவிட்டது செம்பரம்பாக்கம்,புழல் ஏரிகள் படிப்படியாக திறந்துவிடப்படுகிறது கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று கடந்த 2015 சம்பவத்தை சொல்லி கூடுமானவரை தொலைக்காட்சிகள் பயமுறுத்துகிறது.latest tamil newsஜெ.,முதல்வராக இருந்த போது அவரைக் கேட்காமல் எந்த அணை நீரையும் திறந்துவிட முடியாது ஆனால் எங்கள் ஆட்சியில் அதிகாரிகள் யாரையும் கேட்க வேண்டியது இல்லை அவர்களே அணையின் இருப்பை பொறுத்து முடிவு செய்யலாம் என்று தகவலுடன் அரசியலும் பேசுகிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியம்.latest tamil newsஇரண்டு வருஷம் காத்திருந்தோம் இன்னும் இரண்டு நாள் பொறுத்திருக்கமாட்டோமோ? தீபாவளி கொண்டாடிவிட்டு சாவகசமாக எட்டாம் தேதி பள்ளிகளுக்கு பிள்ளைகளை கூட்டிவருகிறோம் என இப்போதுதான் பெற்றோர்கள் முடிவு எடுத்தனர் ஆனால் மழையின் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பெற்றோர்கள் மேலும் சில நாள் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான்.


ஆன் லைனும் இல்லாமல் ஆப் லைனும் இல்லாமல் பிள்ளைகள் என்ன படிப்பது என்பது தெரியாமல் தவிக்கின்றனர்,.ஞாயிறோடு எல்லாம் முடியும் திங்கள் நன்றாக விடியும் என்று பார்த்தால் மழை தொடரும் என்று சொல்லி ‛வெதர்மென்'கிலியை ஏற்படுத்துகிறார்.


ஒரே ஆறுதல் மின்சாரம் பெரும்பாலும் தடையின்றி கிடைக்கிறது,நெட் வொர்க் வேலை செய்கிறது,வாட்ஸ் அப்பில் ‛பல் விலக்கிவிட்டேன்'என்பது போன்ற பயனுள்ள தகவல்கள் அம்பாரமாக பரிமாறப்படுகிறது, போய்ச் சேருமிடம் நிச்சயமில்லை என்ற எச்சரிக்கையுடன் பொது போக்குவரத்து தொடர்கிறது,வீட்டிற்கு பேப்பர் கொண்டு வந்து சேர்க்கப்படுகிறது,சேலை முந்தானையையே தலைக்கு குடையாக போட்டபடி மழையில் நனைந்தபடி இடியாப்பம் விற்றுச் செல்லும் மூதாட்டியை பார்க்க முடிகிறது ,பால் பாக்கெட் அதே விலையில் கிடக்கிறது,‛ஒகோ நம்ம ஊரு ரொம்ப ஜோரு'என்ற சத்தமிடும் வண்டிகளைக் காணோம்,வெளியே என்ன நடக்கிறது என்பது தெரியாமல், தெரிந்து கொள்ள விரும்பாமல் டி20 கிரிக்கெட்டில் நமீபியா,ஆப்கானிஸ்தான் விளயைாடுவதையும் நகம் கடித்தபடி சீரியசாக ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கிறது.


-எல்.முருகராஜ்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VIDHURAN - chennai,இந்தியா
14-நவ-202105:36:25 IST Report Abuse
VIDHURAN இனியும் இப்படித்தான் இருக்கும் என்பது மக்களின் மன நிலையில் தெரிகிறது. சாதாரண நாட்களில் ஒவ்வொரு சென்னை வாசியும் தாம் என்ன செய்யவேண்டும் என்பதே தெரியாமல், மொபைல் போன் ஐ நோண்டிக்கொண்டு இருக்கிறான். தெருவில் குப்பையை குப்பை தொட்டிக்கு வெளியே போடுவதையும் மழை நீர் வடிகளில் பிளாஸ்டிக் பொருட்களையும் உணவு கழிவுகளை போடும் மக்களுக்கு இன்றைய வெள்ளம் தேவை தான். திருந்துவார்களா என்றால் அது இன்னும் ஒரு ஐம்பது வருஷங்களுக்கு நம்பிக்கையே இல்லை. அரசு இயந்திரங்களில் "ஏற்கனேவே துர்பினி இப்போ கர்ப்பிணி" என்ற நிலையில் இருக்கின்றன.ஒரே ஒரு சௌகர்யம் என்னவென்றால் புதிய செய்தி ஒன்றும் இல்லாமல் ரிப்பீட் செய்தியாக இருப்பதால் டிவி யை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஒடியே போய் விட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X