கிளியாற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Dinamalar

தமிழ்நாடு

கிளியாற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Added : நவ 07, 2021
Share
மதுராந்தகம் : மதுராந்தகம் ஏரி விரைவில் அதன் முழு கொள்ளளவை எட்டக் கூடும் என்பதால், கிளியாற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில், பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி, அதன் முழு கொள்ளளவான 23.3 அடியில், 22.8 அடியை தற்போது எட்டியுள்ளது. தொடர்ந்து, வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. விரைவில் ஏரி நிரம்பும் என

மதுராந்தகம் : மதுராந்தகம் ஏரி விரைவில் அதன் முழு கொள்ளளவை எட்டக் கூடும் என்பதால், கிளியாற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி, அதன் முழு கொள்ளளவான 23.3 அடியில், 22.8 அடியை தற்போது எட்டியுள்ளது. தொடர்ந்து, வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. விரைவில் ஏரி நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏரி நிரம்பினால், கிளியாற்று வழியாக வெள்ளப்பெருக்கு ஏற்படும்.இதனால், கிளியாற்றின் இருபுறங்களிலும் உள்ள, தோட்டநாவலூர், விழுதமங்களம், முள்ளி, வளர்பிறை, கே.கே புதுார் வீராணகுண்ணம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கிளியாற்று கரையோர கிராமங்களில், ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும், முன் எச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X