சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தலையின்றி புதைக்கப்பட்ட உடல்

Added : நவ 07, 2021
Share
Advertisement
ஊத்துக்கோட்டை, நவ. 8--பெரியபாளையத்தில், தலை இல்லாமல் உடல் மட்டும் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே, ஏரிக்குப்பம் பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் நேற்று மதியம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள், ரத்தக்கரையுடன் பாதி பிணம் ஒன்று புதைக்கப்பட்டு இருப்பதை கண்டனர்.இது குறித்து பெரியபாளையம்

ஊத்துக்கோட்டை, நவ. 8--

பெரியபாளையத்தில், தலை இல்லாமல் உடல் மட்டும் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே, ஏரிக்குப்பம் பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் நேற்று மதியம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள், ரத்தக்கரையுடன் பாதி பிணம் ஒன்று புதைக்கப்பட்டு இருப்பதை கண்டனர்.

இது குறித்து பெரியபாளையம் போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். பிணத்தை தோண்டி எடுத்தபோது, 30 வயது மதிக்கத்தக்க ஆணின், தலை இல்லாமல் உடல் மட்டும் இருந்தது தெரிய வந்தது.திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., வருண்குமார் நேரில் விசாரணை நடத்தினார். பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.சமீபத்தில் திருத்தணியைச் சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டு, செங்காத்தாகுளம் பகுதியில் புதைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மீண்டும் வாலிபர் ஒருவர் அதே பகுதியில் கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X