நம்பிக்கை பாலம்! பா.ஜ.,வுக்கும் பொது மக்களுக்கும் இடையே ஏற்படுத்துங்க...

Updated : நவ 09, 2021 | Added : நவ 07, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
புதுடில்லி:''பொது மக்களுக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நம்பிக்கை பாலத்தை ஏற்படுத்த வேண்டும். விரைவில் நடக்க உள்ள ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் மக்களின் நம்பிக்கையை தக்க வைத்து, பா.ஜ., உறுதியாக வெற்றி பெறும்,'' என, டில்லியில் நேற்று நடந்த பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம்
 நம்பிக்கை பாலம்!  பா.ஜ.,வுக்கும் பொது மக்களுக்கும்  இடையே ஏற்படுத்துங்க...

புதுடில்லி:''பொது மக்களுக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நம்பிக்கை பாலத்தை ஏற்படுத்த வேண்டும். விரைவில் நடக்க உள்ள ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் மக்களின் நம்பிக்கையை தக்க வைத்து, பா.ஜ., உறுதியாக வெற்றி பெறும்,'' என, டில்லியில் நேற்று நடந்த பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கட்சியின் தேசிய நிர்வாகிகள், தேசிய செயற்குழு உறுப்பினர்களாக இருக்கும் மத்திய அமைச்சர்கள், டில்லியைச் சேர்ந்த தேசிய செயற்குழு உறுப்பினர்கள் என, 124 பேர் மட்டுமே கூட்டத்தில் நேரடியாக பங்கேற்றனர். மற்ற உறுப்பினர்கள் தங்கள் மாநிலங்களில் இருந்தபடி 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக பங்கேற்றனர்.


வீடியோ கான்பரன்ஸ்கட்சியின் தேசிய தலைவர் நட்டா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் நேரடியாகவும், பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாகவும் பங்கேற்றனர்.கூட்டம் துவங்கியதும் இந்தியாவில் 100 கோடி 'டோஸ்'க்கு மேல் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், பிரதமர் மோடிக்கு ஆளுயர மாலையை பா.ஜ., தலைவர் நட்டா, அமித்ஷா மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் அணிவித்தனர்.

இந்த கூட்டத்தில் கட்சி யின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:மேற்கு வங்கத்தில் பா.ஜ., தோல்வியடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் மக்களிடம் ஒரு மாயையை ஏற்படுத்துகின்றன. கடந்த, ௨௦௧௪ லோக்சபா தேர்தல், 2016 சட்டசபை தேர்தலில் மேற்கு வங்கத்தில் பா.ஜ., பெற்ற ஓட்டு சதவீத்தை,2019லோக்சபா தேர்தல், 2021 சட்ட சபை தேர்தலில் பெற்ற ஓட்டு சதவீதத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் கட்சியின் வளர்ச்சியை புரிந்து கொள்ள முடியும்.

ஐந்தே ஆண்டுகளில் எதிர்க்கட்சியாக பா.ஜ., உருவெடுத்துள்ளது. ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. என்னை பொறுத்தவரை பா.ஜ., இன்னும் முழுமையான வெற்றியை பெறவில்லை. ஐந்து மாநிலங்களின் பா.ஜ.,வின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:சேவை, தீர்மானம், கடமை ஆகியவற்றை கொள்கைகளாக வைத்து மக்களுக்கு பா.ஜ., பணியாற்றி வருகிறது. ஒரு குடும்பத்தை நம்பியோ, ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்காகவோ பாடுபடும் கட்சியல்ல பா.ஜ.,இங்கு குடும்ப அரசியல், வாரிசு அரசியல் கிடையாது. மிகவும் ஏழைக் குடும்பத்தில், அரசியல் பின்புலம் இல்லாத குடும்பத்தில் பிறந்த நான் பிரதமராகியுள்ளேன்; இது, பா.ஜ.,வில் மட்டுமே சாத்தியம்.

மக்களுக்கு சேவை செய் வது தான் நம் மந்திரமாக இருக்க வேண்டும். பொது மக்களுக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே நம்பிக்கை பாலத்தை ஏற்படுத்த வேண்டிய கடமை கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு உள்ளது.

விரைவில் நடக்க உள்ள ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் மக்களின் நம்பிக்கையை தக்க வைத்து, பா.ஜ., வெற்றி பெறும் என்பது உறுதி,பா.ஜ., தற்போது அடைந்துள்ள வளர்ச்சியின் பின்னணியில் பலரது தியாகங்கள் உள்ளன. அவர்களை பற்றி, 'நமோ' செயலியில் 'கமல் புஷ்ப்' பிரிவில் பதிவிட வேணடும்.இவ்வாறு பிரதமர் பேசினார்.

பாராட்டுகூட்டத்துக்கு பின் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: கொரோனா பரவல் காலத்தில் மிக சிறப்பான நிர்வாகத்தை அளித்தற்காகவும் 100கோடி டோசுக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளதற்கும், தொற்று காலத்தில் 80 கோடி மக்களுக்கு இலவச மாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டதற்கும், கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி மீண்டும் அமைந்துள்ளது. இதனால் அங்குள்ள மதச் சிறுபான்மையினரின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிஉள்ளது.இதை முன்கூட்டியே உணர்ந்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் உள்ள மதச் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதற்காக பிரதமருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


தீர்மானத்தை வழிமொழிந்தஅண்ணாமலை

பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில் ௧௮ தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசியல் தீர்மானங்களை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்மொழிந்தார். அதை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வழிமொழிந்தார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

தடுப்பூசி சாதனை, பருவநிலை மாற்றம் குறித்த நடவடிக்கைகள், ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம், இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது உள்ளிட்ட ௧௮ விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தடுப்பூசி திட்டத்திற்காக இந்தியாவை உலக நாடுகள் பாராட்டியுள்ளன. ஆனால் துவக்கம் முதலே தடுப்பூசி குறித்து எதிர்க்கட்சியினர் பரப்பிய வதந்தியை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். நாட்டில்100கோடி 'டோஸ்' தடுப்பூசி போட்டதற்காக இந்தியாவுக்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவிக்கின்றன.

தடுப்பூசி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக பாராட்டு தெரிவித்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறறப்பட்டது.ஜம்மு - காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் நடக்கும் அரசியல் வன்முறைக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்து.

விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்கின்றன. விவசாயிகள் நலனுக்காக பல திட்டங்களை அரசு செயல்படுத்தி உள்ளது. நாட்டின் மிகப் பெரிய மாநிலத்தின் முதல்வர் என்ற முறையில், அரசியல் தீர்மானங்களை யோகி ஆதித்யநாத் தாக்கல் செய்தார். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தற்காக மத்திய அரசுக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRAKASH.P - chennai,இந்தியா
08-நவ-202123:53:36 IST Report Abuse
PRAKASH.P why are you worrying about people support..
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
08-நவ-202120:03:18 IST Report Abuse
sankaseshan சனாதன தர்ம பிரிவில் ராமா நீ எந்த பிரிவை சேர்ந்தவன் ஆதாரம் இருந்தா சொல்லு அறிவோடு கமெண்டு போடு
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
08-நவ-202119:59:31 IST Report Abuse
sankaseshan விஸ்வநாதனுக்கு அடியொண்ணும் படவில்லையே பாலத்தில் பார்த்து நடந்துபோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X