இந்தியா

அலுவலகங்களில் வீட்டிலிருந்து பணியாற்றும் வாய்ப்பு பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் திடீர் முடிவு

Added : நவ 07, 2021
Share
Advertisement
பெங்களூரு : ''பெங்களூரின் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணியாற்ற வாய்ப்பளிப்பது குறித்து அந்தந்த நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளலாம். இவ்விஷயத்தில் மாநகராட்சி எந்த உத்தரவும் பிறப்பிக்காது,'' என பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா தெரிவித்தார்.பெங்களூரில் அவர் கூறியதாவது:அந்தந்த நிறுவனங்கள் தமது வசதிக்கு

பெங்களூரு : ''பெங்களூரின் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணியாற்ற வாய்ப்பளிப்பது குறித்து அந்தந்த நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

இவ்விஷயத்தில் மாநகராட்சி எந்த உத்தரவும் பிறப்பிக்காது,'' என பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா தெரிவித்தார்.பெங்களூரில் அவர் கூறியதாவது:அந்தந்த நிறுவனங்கள் தமது வசதிக்கு தக்கபடி, ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்ற வைக்கின்றன.

இனியும் கூட இவ்விஷயத்தில் அந்தந்த நிறுவனங்களே முடிவு செய்யலாம். மாநகராட்சி உத்தரவு எதுவும் பிறப்பிக்காது.கொரோனா பரவ துவங்கிய பின், இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும், 'ஒர்க் பிரம் ஹோம்' நடைமுறையை செயல்படுத்தின.வரும் நாட்களில் இந்த நடைமுறையை நிரந்தரமாக்க ஆலோசிப்பதாக தெரிகிறது. பெங்களூரிலும் இவ்விஷயத்தில் நிறுவனங்கள் முடிவு செய்யலாம்.

வீட்டிலிருந்தே செய்யக்கூடிய பணிகளை வீட்டிலிருந்து செய்ய ஊழியர்களுக்கு வாய்ப்பளிக்கலாம்.நகரில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து விவாதிக்கப்படுகிறது. எப்போது தடுப்பூசி போடப்படும் என்பது குறித்து, இன்னும் முடிவு செய்யவில்லை. அரசு முடிவு செய்த பின் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X