மாவட்ட தடகள போட்டி: நாளை காலை துவக்கம்

Added : நவ 07, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில், தடகள போட்டிகள் வரும் 9ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் துவங்குகிறது.கோவை மாவட்ட தடகள சங்கத்தின், 60வது ஆண்டு இளையோர் தடகள போட்டிகள் மற்றும் ஐந்தாவது மயில்சாமி நினைவு கோப்பைக்கான மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடக்கிறது.100மீ, 200மீ, 500மீ., தடையோட்டம், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல போட்டிகள், 12,14,16,18, 20

கோவை:கோவை மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில், தடகள போட்டிகள் வரும் 9ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் துவங்குகிறது.கோவை மாவட்ட தடகள சங்கத்தின், 60வது ஆண்டு இளையோர் தடகள போட்டிகள் மற்றும் ஐந்தாவது மயில்சாமி நினைவு கோப்பைக்கான மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடக்கிறது.100மீ, 200மீ, 500மீ., தடையோட்டம், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல போட்டிகள், 12,14,16,18, 20 ஆகிய வயது பிரிவின் அடிப்படையில் நடக்கிறது.இதில் கலந்துகொள்ளும் 20 வயது பிரிவினர், 29.11.2001க்கும், 28.11.2003க்கும் இடைப்பட்ட ஆண்டிலும்; 18 வயது பிரிவினர், 29.11.2003க்கும் 28.11.2005க்கும் இடைப்பட்ட ஆண்டிலும்; 16 வயது பிரிவினர் 29.11.2005க்கும் 28.11.2007க்கும் இடைப்பட்ட ஆண்டிலும்; 14 வயது பிரிவினர் 29.11.2007க்கும் 28.11.2009க்கும் இடைப்பட்ட ஆண்டிலும்; 12 வயது பிரிவினர் 29.11.2009க்கும் 28.11.2011க்கும் இடைப்பட்ட ஆண்டிலும் பிறந்திருக்க வேண்டும்.இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர் வரும் நவ., 25 முதல் 28ம் தேதி வரை, திண்டுக்கல் என்.பி.ஆர்., கல்லூரியில் நடைபெறும், மாநில அளவிலான தடகள போட்டிக்கு தகுதி பெறுவர்.இத்தகவலை, கோவை மாவட்ட தடகள சங்க செயலாளர் சம்சுதீன் தெரிவித்தார்.போட்டியில் பங்கேற்க விரும்புவோர், 7871621952, 9843463673, 9842186057 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X