அதிகம் விரும்பப்படும் தலைவர் பிரதமர் மோடிக்கு முதலிடம்

Updated : நவ 09, 2021 | Added : நவ 07, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
புதுடில்லி:அதிக மக்களால் விரும்பப்படும் புகழ்பெற்ற தலைவர்களின் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா உள்ளிட்ட உலகின் 13 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களில் மக்களால் ஏற்றுக் கொள்ளப் படும் தலைவர்களின் பட்டியலை 'மார்னிங் கன்சல்ட்' என்ற அரசியல் புலனாய்வு அமைப்பு வாரந்தோறும் ஆய்வு செய்து வெளியிட்டு
 அதிகம் விரும்பப்படும் தலைவர் பிரதமர் மோடிக்கு முதலிடம்

புதுடில்லி:அதிக மக்களால் விரும்பப்படும் புகழ்பெற்ற தலைவர்களின் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா உள்ளிட்ட உலகின் 13 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களில் மக்களால் ஏற்றுக் கொள்ளப் படும் தலைவர்களின் பட்டியலை 'மார்னிங் கன்சல்ட்' என்ற அரசியல் புலனாய்வு அமைப்பு வாரந்தோறும் ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது.

சம்பந்தப்பட்ட நாட்டு மக்கள் இடையே அவர்களின் தலைவர்களின் செயல்பாடு, திட்டங்கள் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு, மக்களின் கருத்துக்கு ஏற்ப தலைவர்கள் வரிசைபடுத்தப்படுகின்றனர்.இந்த வகையில், நவ., முதல் வாரத்திற்கான கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று வெளியாகின. அதில், 70 சதவீத ஆதரவுடன் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பெற்று உள்ளார்.

வட அமெரிக்க நாடான மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். ஐரோப்பிய நாடான இத்தாலி பிரதமர் மரியோ திராகி, ஜெர்மனி தலைவர் ஏஞ்சலா மெர்க்கல், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோர் அடுத்தடுத்த இடத்தை பிடித்துஉள்ளனர்.அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது. இதையொட்டி பா.ஜ., அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sandru - Chennai,இந்தியா
10-நவ-202111:23:06 IST Report Abuse
Sandru இதை நீங்கள் நம்பினால்தான் சோறு. இல்லைனா கிடையாது. நம்பி விட்டிர்கலா .
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
09-நவ-202120:10:21 IST Report Abuse
sankaseshan ஆட்சி செய்யும் திராவிடனுங்க யோக்கியமா பொய்ச்சொல்லியே பதவிக்கு வந்தவனுங்க , சொன்னதை செய்து பழக்கமில்லாதவர்கள் 1967 னொன்னா காலத்திலிருந்து .
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
08-நவ-202123:20:45 IST Report Abuse
J. G. Muthuraj மொத்தத்தில் 2126 நபர்களைத்தான் ஆன்லைன் இன்டர்வியூ செய்துள்ளார்கள். அதில் பெரும்பான்மை ஆதரவு பெற்றிருக்கிறார் நமது பிரதமர். இந்த கணக்கெடுப்பு வாராவாரம் நடக்கும். ரேட்டிங் கூடலாம்/குறையலாம். 2020 ல் இதைவிட அதிக சதவிகித ஆதரவு மோடிஜி பெற்றிருக்கிறார்.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X