பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரிகளுக்கு யு.ஜி.சி., அறிவுரை

Added : நவ 07, 2021
Share
Advertisement
கோவை:அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, பல்கலை கழக மானியக்குழு அனைத்து கல்லுாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.நாட்டின், 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, 'ஆசாதிக்கா அமிரித் மகோத்சவ்' எனும் நிகழ்ச்சி, தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.சுதந்திரத்தை போற்றும் விதமாக அனைத்து பல்கலை, கல்லுாரிகள், கல்வி

கோவை:அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, பல்கலை கழக மானியக்குழு அனைத்து கல்லுாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.நாட்டின், 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, 'ஆசாதிக்கா அமிரித் மகோத்சவ்' எனும் நிகழ்ச்சி, தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.சுதந்திரத்தை போற்றும் விதமாக அனைத்து பல்கலை, கல்லுாரிகள், கல்வி நிறுவனங்கள், அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.பல்கலை மானியக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சுதந்திரத்துக்காக போராடிய வீரர்கள் குறித்த தகவல்களை திரட்டி, அது குறித்து தங்கள் பகுதியில் மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அது தவிர, சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து கருத்தரங்குகள், நிகழ்வுகள் நடத்த வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நடத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்து, பல்கலை மானியக்குழுவுக்கும் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X