தேசிய அளவிலான சிலம்பப் போட்டி: தங்கம் வென்ற கோவை வீராங்கனை

Added : நவ 07, 2021
Share
Advertisement
கோவை:கோவாவில் நடந்த தேசிய அளவிலான சிலம்ப போட்டியில், கோவையை சேர்ந்த சந்தியா தங்கப்பதக்கம் வென்று கலக்கியுள்ளார்.தேசிய அளவிலான சிலம்ப போட்டி கோவாவில் நடந்தது. இதில் நாட்டிலுள்ள பல மாநிலங்களிலிருந்து, 200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.இப்போட்டியில் கோவை மாவட்டம் ராசிபாளையம் பகுதியை சேர்ந்த சந்தியா, 22 வயதுக்குட்பட்டோருக்கான ஒற்றையர் பிரிவில்

கோவை:கோவாவில் நடந்த தேசிய அளவிலான சிலம்ப போட்டியில், கோவையை சேர்ந்த சந்தியா தங்கப்பதக்கம் வென்று கலக்கியுள்ளார்.தேசிய அளவிலான சிலம்ப போட்டி கோவாவில் நடந்தது. இதில் நாட்டிலுள்ள பல மாநிலங்களிலிருந்து, 200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.இப்போட்டியில் கோவை மாவட்டம் ராசிபாளையம் பகுதியை சேர்ந்த சந்தியா, 22 வயதுக்குட்பட்டோருக்கான ஒற்றையர் பிரிவில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கப்பதக்கத்தை தட்டி சென்றார்.இதுதவிர, சமீபத்தில் மதுரையில் நடந்த நடுவருக்கான தேர்விலும் இவர் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் சிலம்ப போட்டிகளில் நடுவராக பங்குபெறும் தகுதி பெற்றுள்ளார் சந்தியா.சந்தியா கூறுகையில், "என்னுடைய அப்பா சிலம்ப பயிற்சியாளர். இதனால் சிலம்பம் மீது அதிக ஆர்வம் வந்தது. அவரிடமே ஏழு வயதில் இருந்து கற்று வருகிறேன். மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றுள்ளேன். எங்கள் பகுதியில் உள்ள சிறுவர், சிறுமியருக்கும் இலவசமாக பயிற்சி அளித்து வருகிறேன்," என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X