பொது செய்தி

தமிழ்நாடு

வானிலை திடீர் மாற்றத்தால் விடிய விடிய மழை: கணிப்பையும் தாண்டி கொட்டியது

Updated : நவ 09, 2021 | Added : நவ 07, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை:சென்னையில் குறுகியகாலத்தில், வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால், விடிய விடிய தொடர்ச்சியாக மழை கொட்டியது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் கன மழை பெய்யும் மாவட்ட நிலவரம், சென்னை வானிலை ஆய்வு மையத்தால் தினமும் அறிவிக்கப்படுகிறது. கடந்த 6ம் தேதி வெளியிட்ட வானிலை கணிப்பில்,
 வானிலை திடீர் மாற்றத்தால் விடிய விடிய மழை: கணிப்பையும் தாண்டி கொட்டியது

சென்னை:சென்னையில் குறுகியகாலத்தில், வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால், விடிய விடிய தொடர்ச்சியாக மழை கொட்டியது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் கன மழை பெய்யும் மாவட்ட நிலவரம், சென்னை வானிலை ஆய்வு மையத்தால் தினமும் அறிவிக்கப்படுகிறது. கடந்த 6ம் தேதி வெளியிட்ட வானிலை கணிப்பில், சென்னையில் மிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் முன் எச்சரிக்கை செய்யவில்லை.


இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், நேற்று முன்தினம் மிதமான மழை பெய்யும்; மத்திய, தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கணிப்புக்கு மாறாக நேற்று முன்தினம் இரவில் சென்னையில் துவங்கிய கன மழை விடிய விடிய கொட்டியது.இந்த மழையால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக் காடாகின. இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த திடீர் மழை குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் அளித்த விளக்கம் வருமாறு: தமிழகத்தில் நவம்பர் 1ல் துவங்கி, நேற்று வரையிலான மழையில் இயல்பாக 23 செ.மீ., பெய்ய வேண்டும். ஆனால், 43 சதவீதம் அதிகமாக 33 செ.மீ., மழை பெய்துள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று வரை கன மழை பெய்துள்ளது. இது எதிர்பாராத ஒன்று.

செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கன மழை பெய்யும் வாய்ப்பிருந்தது. அதை ஒரு நாள் முன்பாகவே கணித்து கூறினோம். எதிர்பார்ப்புக்கு மாறாக, சென்னையில் மிக குறுகிய நேரத்தில் வானிலை மாறியது.


முன்னெச்சரிக்கைஇந்த நிகழ்வு எப்போதாவது நடக்கும். இதை, 'நவ் காஸ்ட்' என்ற பெயரில், மூன்று மணி நேரத்துக்கு முன்னர் வரை கணித்து வருகிறோம். ஆனால், திடீரென வானிலை நிகழ்வு மாறி, கன மழை கொட்டுவதை நீண்ட நேரத்துக்கு முன் கணிக்க முடியாது.இந்த அடிப்படையிலேயே, மிக குறுகிய காலத்தில் சென்னையில் திடீர் மழை பெய்துள்ளது. நவ., 6 காலை 8:30 முதல், இரவு 10:00 மணி வரை 3 செ.மீ., மழை பெய்திருந்தது.

நள்ளிரவு 1:00 மணி முதல் 1:45 மணி வரை, 6 செ.மீ., மழை பெய்து விட்டது. அதன்பின், நேற்று காலை 5:00 முதல் 6:00 மணி வரையிலான நேரத்தில் கூடுதலாக 7 செ.மீ., மழை பெய்துள்ளது. வரும் காலங்களில் திடீர் நிகழ்வுகளை கணிக்கவும், மிக குறுகிய காலத்தில் ஏற்படும் வானிலை மாற்றங்களை முன்னெச்சரிக்கை செய்யவும், தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


காற்றின் வேகக் குறைவு

இந்த திடீர் வானிலை மாற்றத்துக்கு, காற்று வீசும் அளவு குறைந்ததும் காரணம் என கூறப்படுகிறது. அதாவது, ஆந்திர கடலோரம் வரை பரவியிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, ஆந்திர கடற்பகுதிக்கு நகரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், காற்றின் வேகம் குறைந்ததால், வளிமண்டல சுழற்சி அப்படியே சென்னைக்கு அருகில் மையம் கொண்டு, திடீர் மழையாக கொட்டி தீர்த்துள்ளதாக, பல்வேறு தரப்பு வானிலை ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
08-நவ-202106:49:29 IST Report Abuse
Kasimani Baskaran ஆண்மீக பூமியில் ஆள்பவர்கள் கட்டுப்பாடில்லாமல் ஓவராக ஆட்டம் போட்டால் இயற்கை சீற்றங்கள் முன்னரிவிப்புக்களின்றி சொல்லிக்கொள்ளாமல் வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
Rate this:
வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா
08-நவ-202116:02:39 IST Report Abuse
வந்தியதேவ வல்லவரையன்அப்ப.. 2015ல் சென்னை பெருவெள்ளம் வந்துபோதும் - 2004ல் சுனாமி பேரலை வந்தபோதும் ஆள்பவர்கள் கட்டுப்பாடில்லாமல் ஓவராக ஆட்டம் போட்டாதால்தானா சார்... சரி.... இந்த தத்துவம்.... எங்க சார் சொல்லப்பட்டிருக்கிறது... பகவத் கீதையிலா... ரிக், யஜூர் வேதங்களிலா.... கருட புராணத்திலா.... எதுல சார்...?...
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
08-நவ-202118:38:32 IST Report Abuse
Kasimani Baskaranஇந்துக்கடவுள் மட்டும் இல்லை என்ற கொள்கை உடைய கூட்டத்துக்கு எதையும் அவ்வளவு எளிதில் புரிய வைக்க முடியாது. இருந்தாலும் சொல்கிறேன். "அரசின் அலட்சியப் போக்கினால், கடுமையான பருவநிலை மாற்றத்திற்கு ஆளாகி, துன்பமிகு வாழ்க்கையில் சிக்கிக் கொள்வார்கள். (பாகவத புராணம் 12.2.9) கடுங்குளிர், புயல், கடும் வெப்பம், கனமழை, உறைபனி, வெள்ளம் போன்ற பல இயற்கை பேரிடர்களில் சிக்கி மக்கள் தவிப்பார்கள். இதனால் பசி, தாகம், நோய், பயம், சச்சரவு போன்ற கடுந்துன்பங் களிலும் சிக்கிக் கொள்வார்கள். (பாகவத புராணம் 12.2.10)" - பகவான் கிருஷ்ணரின் அவதாரமான வேதவியாசர் சொல்லியவை. அலட்சியப்போக்கு என்பது - நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை கண்டுகொள்ளாமல் விடுவது. ஊரின் நடுவே கூவம் விடுவதும் இதே வகைதான்....
Rate this:
வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா
08-நவ-202120:03:15 IST Report Abuse
வந்தியதேவ வல்லவரையன்அய்யா காசிமணி பாஸ்கர் சார்... ////அரசின் அலட்சியப் போக்கினால், கடுமையான பருவநிலை மாற்றத்திற்கு ஆளாகி/// அப்படீன்னு பாகவதபுராணத்தில் சொல்லி இருப்பதா சொல்லி இருக்கீங்க... சரி ரைட்டு... “செகப்பா இருக்குறவ... பொய் சொல்லமாட்டான்”...ன்னு வடிவேல் காமெடியின்படி ஏற்றுக் கொள்கிறேன்... ஆனால்... கடுமையான பருவநிலை மாற்றம் என்பது அரசின் அலட்சியப் போக்கிலா அல்லது மக்களின் அலட்சியம், திமிர், தெனாவட்டு, தான்தோன்றித்தனத்திலா...? என்பதுதான் என் கேள்வி...? அரசு என்பது ஒரு உயிருள்ள தனி மனிதன் அல்ல... மக்கள்தான் அரசு... அப்ப... தனிமனிதன் ஒன்றாக சேர்ந்து கூட்டமாகி... கடுமையான பருவநிலை மாற்றத்தின் காரணிகளாக அமையும்போது... அரசை எப்படி குற்றம் சொல்கிறீர்கள்...? அடுத்த கேள்வி... அதே பாகவதபுராணத்தில் ///கடுங்குளிர், புயல், கடும் வெப்பம், கனமழை, உறைபனி, வெள்ளம் போன்ற பல இயற்கை பேரிடர்களில்...// அப்படீன்னு சொல்லி இருக்கீங்க... கடுங்குளிர், புயல், கடும் வெப்பம், கனமழை, உறைபனி, வெள்ளம் போன்றவற்றிற்கு காரணிகள் யார்? அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அல்லவா? ஏரியின் நடுவில் பங்களா கட்டிவிட்டு தண்ணீர் தேங்கவிடாமல் தடுப்பதால்... வெள்ளம், பூமிக்குள் தண்ணீர் இறங்காமல் செய்வதால்... கடும் வெப்பம்... ஏசி., பெட்ரோல், டீசல் வாகனங்கள் புகை அதிகமாகி, காற்றை மாசாக்கி அதன் மூலம் ஓசோன் படலத்தில் ஓட்டை விழச் செய்து உறைபனி, கடுங்குளிர், கனமழை இவற்றை உருவாக்குபவர்கள் யார்... மக்கள்தானே....? இதையெல்லாம் அஃறினையான “அரசு” எப்படி செய்யும்... மனிதர்களின் கூட்டம்தானே “அரசு”... அப்புறம் எப்படி “அரசு” சொன்னதாக சொல்கிறீர்கள்... கொஞ்சம் விளக்குங்கள்... அதிமேதாவி சிங்கப்பூர் சீமான் காசிமணி பாஸ்கர் அவர்களே......
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
08-நவ-202106:15:04 IST Report Abuse
NicoleThomson ஐயா ஈகோவை விட்டு பலரும் அவர்களின் அனுபவ ரீதியில் சொல்லும் கருத்துக்களை கண்டறிந்து எப்படி கணிக்கின்றனர் என்பதனை அறிய முயலுங்கள் மற்றொரு முறை எனது விவசாய நண்பர் குனிகள் விவசாயி sanjeev விடிய விடிய டெஸ்ட் மாட்ச் ஆடும் என்று எப்படி சொன்னார் என்பதனை அவரது முகநூலில் கேட்டு பாருங்களேன் , இன்று முதல் கடலூர் முதல் சீர்காழி வரை தடம்புரட்டும் என்று கூறியுள்ளார் கற்றுக்கொள்ள முயன்று பாருங்க அவரின் உறவுகள் அங்கே இருப்பதால் அவர் இந்த பதிவு போட்டதாக கூறுகிறார் ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X