பணத்துக்காக பழ வியாபாரி மகனை கொலை

Added : நவ 07, 2021
Share
Advertisement
ஆர்.ஆர்.நகர் : பணத்துக்காக பழ வியாபாரி மகனை கொலை செய்து கால்வாயில் வீசியெறிந்த சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.பெங்களூரு பாரதிநகரில் வசிக்கும் மணி என்பவர், திருமண மண்டபங்களுக்கு பழங்கள் சப்ளை செய்கிறார். இவரிடம் தஜிமுல்லா பாஷா, 39, என்பவர் வாகன ஓட்டுனராக பணியாற்றினார்.இவர் சில மாதங்களுக்கு முன், மணியிடம் மூன்று லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். வேலையை விட்டு

ஆர்.ஆர்.நகர் : பணத்துக்காக பழ வியாபாரி மகனை கொலை செய்து கால்வாயில் வீசியெறிந்த சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு பாரதிநகரில் வசிக்கும் மணி என்பவர், திருமண மண்டபங்களுக்கு பழங்கள் சப்ளை செய்கிறார். இவரிடம் தஜிமுல்லா பாஷா, 39, என்பவர் வாகன ஓட்டுனராக பணியாற்றினார்.இவர் சில மாதங்களுக்கு முன், மணியிடம் மூன்று லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். வேலையை விட்டு சென்றும் கடனை திருப்பி கொடுக்கவில்லை.

மணியிடம் நிறைய பணம் இருப்பதை தெரிந்து கொண்ட தஜிமுல்லா பாஷா, அதை பறிப்பதற்கு தன் சகோதரன் சையத் நாசிர், 21,வுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார்.இருவரும் மணியின் மகன் தருண், 21, என்பவரை கடத்தி பணம் பறிக்க முடிவு செய்தனர். நவம்பர் 1ல், தருண் பட்டாசு வாங்கி வர, ஓசூருக்கு செல்வதாக தாயிடம் கூறி சென்றார். இவரை சந்தித்த தஜிமுல்லா பாஷா, சையத் நாசிர், புட்டேனஹள்ளியின் அரகரேவில் உள்ள, தங்கள் சகோதரி வீட்டில் பட்டாசு குறைந்த விலைக்கு கிடைக்குமென கூறி அங்கு அழைத்து சென்று, அறையில் அடைத்தனர்.

அவரை கத்த விடாமல் செய்ய வாயை பிளாஸ்டரால் ஒட்டினர். கை,கால்களை கட்டினர். தருண் தப்ப முயற்சித்து கூச்சலிட்டதால், அவரது கழுத்தை ஒயரால் நெரித்து கொலை செய்தனர். அதன்பின் அவரது தந்தை மணியை, மொபைல் போனில் தொடர்பு கொண்ட அவர்கள், 'உங்கள் மகனை கடத்தியுள்ளோம். அவரை விடுவிக்க வேண்டுமானால் 50 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும்' என, மிரட்டினர்.

இது குறித்து, ஆர்.ஆர்.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசாரும் விசாரணையை துவங்கினர்.இதனால் பயந்த கொலையாளிகள், தருண் உடலை கோணிப்பையில் திணித்து டிசோசா நகரின் மழைநீர் கால்வாயில் வீசிவிட்டு தப்பினர்.நவம்பர் 2ல் பிளாஸ்டிக், காகிதம் சேகரிப்போர், கால்வாயில் கோணிப்பை மிதப்பதை பார்த்து, அதை பிரித்து பார்த்த போது, உடலிருப்பதை கண்டு போலீசாரிடம் தகவல் கூறினர். போலீசார் விசாரணையில் அது தருண் என்பது தெரிந்தது.மணிக்கு மிரட்டல் அழைப்பு வந்த, மொபைல் எண்ணை வைத்து, போலீசார் விசாரணை நடத்தினர்.கொலையாளிகள் மைசூரு சாலையின் சாட்டிலைட் பஸ் நிலையம் அருகில் இருப்பது தெரிந்தது. நேற்று முன் தினம், கொலையாளிகளை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X