சர்வதேச பேட்மின்டன் போட்டி: கோவை மாணவருக்கு வெள்ளி

Added : நவ 07, 2021
Share
Advertisement
கோவை:சர்வதேச ஓபன் பேட்மின்டன் போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர் சதீஷ்குமார் வெள்ளி பதக்கம் வென்றார்.பல்கேரியா, புடாரஸ் நகரில், 46-வது சர்வதேச அளவிலான ஓபன் பேட்மின்டன் போட்டி, கடந்த 3ம் தேதி முதல், 6ம் தேதி வரை நடந்தது.இந்தியா, ஆஸ்திரியா, டென்மார்க், மெக்ஸிகோ, போலந்து, பல்கேரியா, ஹங்கேரி, மலேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட வீரர்கள்

கோவை:சர்வதேச ஓபன் பேட்மின்டன் போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர் சதீஷ்குமார் வெள்ளி பதக்கம் வென்றார்.பல்கேரியா, புடாரஸ் நகரில், 46-வது சர்வதேச அளவிலான ஓபன் பேட்மின்டன் போட்டி, கடந்த 3ம் தேதி முதல், 6ம் தேதி வரை நடந்தது.இந்தியா, ஆஸ்திரியா, டென்மார்க், மெக்ஸிகோ, போலந்து, பல்கேரியா, ஹங்கேரி, மலேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோவையை சேர்ந்த சதீஷ்குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.இறுதி ஆட்டத்தில், பல்கேரியா நாட்டு வீரர் டேனியல் நிக்கோலவ் என்பவரிடம். 21-17, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.சதீஷ்குமாரை,எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி, கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார், உடற்கல்வி இயக்குனர் வடிவேல் ஆகியோர் வாழ்த்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X