பொது செய்தி

தமிழ்நாடு

போராட்டத்தில் குதிக்க தொழில்துறையினர் திட்டம்! மூலப்பொருள் விலை உயர்வால் தயாராகின்றனர்

Added : நவ 07, 2021
Share
Advertisement
கோவை:மூலப்பொருட்களை சப்ளை செய்யும் பொதுத்துறை நிறுவனங்கள் அபரிமிதமான லாபம் ஈட்டினாலும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிப்பிற்குள்ளாகியிருக்கின்றன. அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல, விரைவில் போராட்டத்தில் குதிக்க திட்டமிட்டு வருகின்றன.கொரோனாவால் இரண்டு ஆண்டுகள் மூடப்பட்டிருந்த தொழில் நிறுவனங்கள் மீண்டும் செயல்பட துவங்கின. தொழில் நிறுவனங்கள்

கோவை:மூலப்பொருட்களை சப்ளை செய்யும் பொதுத்துறை நிறுவனங்கள் அபரிமிதமான லாபம் ஈட்டினாலும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிப்பிற்குள்ளாகியிருக்கின்றன. அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல, விரைவில் போராட்டத்தில் குதிக்க திட்டமிட்டு வருகின்றன.கொரோனாவால் இரண்டு ஆண்டுகள் மூடப்பட்டிருந்த தொழில் நிறுவனங்கள் மீண்டும் செயல்பட துவங்கின. தொழில் நிறுவனங்கள் மீண்டும் செயல்பட மத்திய அரசு கடனுதவி அளித்தது, இந்த நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.
மூலப்பொருட்கள் உயர்வுஅதேசமயம், உற்பத்தி பொருட்களின் ஆதாரமாக விளங்கும், மூலப்பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தது, கடும் பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கின்றன.தேனிரும்பு, தாமிரம், அலுமினியம் இவற்றை தொடர்ந்து நிலக்கரி விலையும், 50 முதல் 100 சதவீதம் உயர்ந்து வருகிறது.கோவையில் உள்ள பல தொழில் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களான பெல், பிஇஎம்எல், மாருதி மற்றும் ரயில்வேக்கு, வாகன உதிரி பாகங்களை அனுப்பி வருகின்றன.
இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பொருட்களை பெறுகின்றன. இந்த ஒப்பந்தங்களை மேற்கொண்ட தொழில் நிறுவனங்கள், மூலப்பொருள் விலை உயர்வால் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளன.ஆர்டர்களை நிறைவேற்ற தவறினால், மீண்டும் இந்த நிறுவனங்களுக்கு பொருட்களை சப்ளை செய்யவும் இயலாது. விலை உயர்வை ஈடுகட்டும் விதிமுறையும் ஒப்பந்தத்தில் இல்லை.தொழிலை தொடர்ந்து நடத்த வேண்டுமானால், நஷ்டத்திற்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு, வங்கிகளுக்கும் தவணை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், விரைவில் தங்களது நிலையை அரசுக்கு தெரிவிக்க, 'லாக் டவுன்' போராட்டம் நடத்தவும் தொழில் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
5 முதல் 10 சதவீதம் லாபம்அ
பரிமிதமாக லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்கள், மூலப்பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனங்கள் இரண்டு ஆண்டுகளில் விலை ஏற்றத்தால், 5 முதல் 10 மடங்கு லாபம் ஈட்டியுள்ளன.இன்னும் பல நிறுவனங்கள், அலுமினியம், இரும்பு, தாமிரம் போன்றவற்றின் தாதுக்களை அப்படியே ஏற்றுமதி செய்துள்ளன.

உலகச் சந்தையில் இவற்றின் தேவைக்கு ஏற்ப விலையை உயர்த்தியுள்ளன.இந்த விலை உயர்வு, உள்நாட்டிலும் எதிரொலித்ததால் மூலப்பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்நிறுவனங்கள், ஏற்றுமதியில் லாபம் ஈட்டினாலும் உள்நாட்டு தொழில் வளர்ச்சிக்கு உதவ, மானிய விலையில் பொருட்களை வழங்க முடியும் என்பது தொழில் நிறுவனங்களின் கருத்தாக உள்ளது.

இது குறித்து, கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (கொடிசியா) தலைவர் ரமேஷ்பாபு கூறியதாவது:தொடர்ந்து உயர்ந்து வரும் மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த, மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தும் பயன் இல்லை. விலை உயர்வால் தொழில் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.மத்திய அரசு, வெளிநாடுகளுக்கு தாதுக்களாக ஏற்றுமதி செய்வதை தவிர்த்து, உள்நாட்டில் பொருட்களாக உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்ய வேண்டும்.
மதிப்பு கூட்டு பொருட்களால் தொழில் வளர்ச்சியும், வேலை வாய்ப்பும் அதிகரிக்கும். வடமாநிலங்களில் மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தென்மாநிலங்களும் போராட்டத்தில் ஈடுபட தயாராகி வருகின்றன. அரசு தலையிட்டு, மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து பொருட்களை வாங்கும் அரசு, பொது துறை நிறுவனங்கள், விலை உயர்வுக்கு ஏற்ப நஷ்டத்தை ஈடுகட்டும் விலையை வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X