பொது செய்தி

தமிழ்நாடு

'பாமரர்களுக்காக இலக்கியம் படைத்தார் கண்ணதாசன்'

Added : நவ 07, 2021
Share
Advertisement
கோவை:கோவையில் பேரூர் தமிழ்மன்றம் சார்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. 'கண்ணதாசன் படைப்புகளில் மேலோங்கி நிற்பது இலக்கிய வளமா, யதார்த்த வாழ்க்கையா ' என்ற தலைப்பில், நடந்த பட்டிமன்றத்துக்கு கவிஞர் குமார் நடுவராக இருந்தார்.'இலக்கிய வளமா?' என்ற தலைப்பில் கவிஞர்கள் சிவாஜி பெருமாள், அறிவுமதி, ஜெயப்பிரகாஷ், மஞ்சு, சுமதி ஆகியோரும், 'யதார்த்த வாழ்க்கை' என்ற தலைப்பில்,

கோவை:கோவையில் பேரூர் தமிழ்மன்றம் சார்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. 'கண்ணதாசன் படைப்புகளில் மேலோங்கி நிற்பது இலக்கிய வளமா, யதார்த்த வாழ்க்கையா ' என்ற தலைப்பில், நடந்த பட்டிமன்றத்துக்கு கவிஞர் குமார் நடுவராக இருந்தார்.'இலக்கிய வளமா?' என்ற தலைப்பில் கவிஞர்கள் சிவாஜி பெருமாள், அறிவுமதி, ஜெயப்பிரகாஷ், மஞ்சு, சுமதி ஆகியோரும், 'யதார்த்த வாழ்க்கை' என்ற தலைப்பில், கவிஞர்கள் நியோகி,- சண்முகம் -அன்புமதி, கவிதா, சிவசோலை ஆகியோர் வாதிட்டு பேசினர்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கவிஞர் அரங்ககோபால் பேசியதாவது:கவிஞர் கண்ணதாசன் நாத்திகராக இருந்து ஆத்திகராக மாறியவர். இலக்கியம், ஆன்மிகம், அரசியல், சினிமா இவை எதில் இருந்தும், அவரை பிரிக்க முடியாது. இவை எல்லாவற்றிலும் ஆழ்ந்த அனுபவம் பெற்றவர்.கண்ணதாசன் மக்கள் வாழ்க்கையை இலக்கியமாக்கியவர். இதில் எது மேலோங்கி இருந்தது என்றால் இரண்டும்தான். அவர் பண்டிதர்களுக்காக இலக்கியம் படைக்கவில்லை, பாமரர்களுக்காக இலக்கியம் படைத்தார்.இவ்வாறு, அவர் பேசினார். வழக்கறிஞர் சங்க தலைவர் -அருள்மொழி, பேரூர் தமிழ் மன்றம் தலைவர்- ரவி,- கவிஞர் முனிராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X