பொது செய்தி

இந்தியா

ம.ஜ.த., - எம்.எல்.சி., பா.ஜ.,வில் சேருகிறார்

Added : நவ 07, 2021
Share
Advertisement
பெங்களூரு : ம.ஜ.த.,வை விட்டு விலகி, பா.ஜ., காங்கிரசுக்கு செல்லும் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இடைத்தேர்தல் முடிந்ததை தொடர்ந்து, மற்றொரு எம்.எல்.சி., ம.ஜ.த., மேலிடத்துக்கு 'ஷாக்' கொடுத்துளார்.கர்நாடக ம.ஜ.த.,வின் எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவராக கட்சி மாறி வருகின்றனவர். மைசூரின் சாமுண்டீஸ்வரி தொகுதி எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா, கோலாரின் சீனிவாஸ், குப்பியின் சீனிவாஸ்

பெங்களூரு : ம.ஜ.த.,வை விட்டு விலகி, பா.ஜ., காங்கிரசுக்கு செல்லும் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இடைத்தேர்தல் முடிந்ததை தொடர்ந்து, மற்றொரு எம்.எல்.சி., ம.ஜ.த., மேலிடத்துக்கு 'ஷாக்' கொடுத்துளார்.

கர்நாடக ம.ஜ.த.,வின் எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவராக கட்சி மாறி வருகின்றனவர். மைசூரின் சாமுண்டீஸ்வரி தொகுதி எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா, கோலாரின் சீனிவாஸ், குப்பியின் சீனிவாஸ் ஆகியோர் ம.ஜ.த.,வை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளனர். இம்மூவரும் காங்கிரசில் சேர ஆலோசிக்கின்றனர்.இந்நிலையில் ம.ஜ.த., - எம்.எல்.சி., மனோகர், பா.ஜ.,வுக்கு செல்ல தயாராகிறார்.இவரது பதவி காலம் இரண்டு மாதங்களில் முடிகிறது. ஜனவரியில் உள்ளாட்சியிலிருந்து, மேலவைக்கு தேர்தல் நடக்கவுள்ளது.சிக்கபல்லாபூர் - தொகுதியில் இவரை களமிறக்க பா.ஜ., ஆலோசிக்கிறது

.இது குறித்து, சமீபத்தில் பேச்சு நடத்தப்பட்டது. பா.ஜ.,வில் சேர்ந்து போட்டியிட மனோகர் சம்மதித்துள்ளார்.பெங்களூரு மாநகராட்சி தேர்தல், மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து, சட்டசபை தேர்தலுக்கு ம.ஜ.த., தயாராகி வரும் நிலையில், எம்.எல்.ஏ.,க்கள் ஒருவர் பின் ஒருவராக, கட்சிக்கு 'டாட்டா' காண்பித்து, வேறு கட்சிக்கு தாவுவது, ம.ஜ.த., வுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.முன்னாள் முதல்வர் குமாரசாமி, நேற்று கூறியதாவது:யார் கட்சியை விட்டு சென்றாலும் எனக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை. குப்பி எம்.எல்.ஏ., சீனிவாஸ் உட்பட சிலர் ம.ஜ.த.,வை விட்டு செல்கின்றனர். யார், யார் கட்சியை விட்டு வெளியேறுவர் என்பது எனக்கு தெரியும். தேர்தல் அறிவிக்கும் முன்பே எனக்கு அனைத்தும் தெரியும்.யார் கட்சியை விட்டு சென்றாலும், எங்களுக்கு நஷ்டமில்லை. 2006ல் எத்தனை பேர், ம.ஜ.த.,வை விட்டு சென்றனர்.

அதன்பின் எத்தனை பேர் சென்றும், கட்சியை காப்பாற்ற எங்கள் குடும்பம் உழைத்தது. இனியும் உழைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.சித்துவுடன் தேவகவுடா பங்கேற்பு மைசூரின் சாமுண்டீஸ்வரி தொகுதிக்குட்பட்ட, ஹினகல்லில், நாளை (9ம் தேதி) மதியம் 12:30 மணிக்கு அம்பேத்கர் பவன்; மதியம் 1:30 மணிக்கு கேர்கள்ளியில் திருமண மண்டபம் திறப்பு விழா நடக்கவுள்ளது. இந்நிகழ்ச்சிகளில் ம.ஜ.த.,விலிருந்து, மனதளவில் விலகியுள்ள சாமுண்டீஸ்வரி தொகுதி எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா, மைசூரில் நாளை நடக்கும் நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவுடன் பங்கேற்கிறார்.அவர் கூறுகையில், 'ஒரு எம்.எல்.ஏ.,வாக என் தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சியில் நான் பங்கேற்கிறேன். இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம்,' என்றார்.சித்துவுடன் தேவகவுடா பங்கேற்பு

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X