தமிழ்நாடு

வெள்ளக்காடானது வட சென்னை பகுதிகள்; வடிகால்வாய் அமைத்தும் பயனில்லை

Updated : நவ 08, 2021 | Added : நவ 07, 2021
Share
Advertisement
சென்னை : வழக்கம் போல, இந்தாண்டும் பருவ மழையால் வட சென்னை பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.ஆவடி மாநகராட்சி பகுதியில், 2019ல் 27.3 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஐந்து இடங்களில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும்பணி துவங்கி, இந்தாண்டு துவக்கத்தில் முடியும் தருவாயில் இருந்தது. ஆவடி- - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மழை நீர் வடிகால்வாய் அமைக்க, 11.20 கோடி ரூபாயில் பணி நடந்தது. இவ்விரு
 வெள்ளக்காடானது வட சென்னை பகுதிகள்;   வடிகால்வாய் அமைத்தும் பயனில்லை


சென்னை : வழக்கம் போல, இந்தாண்டும் பருவ மழையால் வட சென்னை பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.ஆவடி மாநகராட்சி பகுதியில், 2019ல் 27.3 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஐந்து இடங்களில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும்பணி துவங்கி, இந்தாண்டு துவக்கத்தில் முடியும் தருவாயில் இருந்தது.

ஆவடி- - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மழை நீர் வடிகால்வாய் அமைக்க, 11.20 கோடி ரூபாயில் பணி நடந்தது. இவ்விரு பணிகளையும் மாநகராட்சி, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்கூட்டியே திட்டமிட்டு முடிக்கவில்லை. இதனால், ஆவடியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகள், பருத்திப்பட்டு, அசோக் நிரஞ்சன் நகர், வசந்தம் நகர், சங்கரர் நகர் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து, வெள்ளக்காடாக மாறியுள்ளது.

அம்பத்துார்
சென்னை அம்பத்துார் மண்டலத்தில் மழை நீர் வடிகால் பணிகள், 60 சதவீதம்முடிக்கப்பட்டுள்ளன. ஆனால், மழை நீர் வடிகால்மற்றும் பாதாள சாக்கடைகள், நீர்வரத்து மற்றும் நீர் போக்கிற்கான சரியான இணைப்பின்றி ஆங்காங்கே அடைபட்டுள்ளன. இதனால், வழக்கம் போல் இந்தாண்டும், அம்பத்துார் மண்டல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.அம்பத்துார் மண்டலம் 85வது வார்டு, சாம்தாரியா நகர், கொரட்டூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, சீனிவாசபுரம், ஞானமூர்த்தி நகர்.விஜயலட்சுமிபுரம், கருக்கு, பட்டரவாக்கம், டி.டி.பி., காலனி, கொரட்டூர் ரயில்வே சுரங்கப்பாதை, கள்ளிக்குப்பம், முத்தமிழ் நகர் என, மண்டலத்தின் அனைத்து பகுதியும் வெள்ளத்தில் மூழ்கின.

இதனால், மக்கள் வீடுகளில் இருந்து வெளியேவர முடியாமல் முடங்கினர்.திருவொற்றியூர்திருவொற்றியூர் மேற்கில் ரயில்வே குட்டை நிரம்பியதால், அம்பேத்கர் நகர், அண்ணா நகர், அண்ணாமலை நகர், உள்ளிட்ட பல நகர்கள் மூழ்கி, கடல் போல மாறியது. எர்ணாவூர், கிரிஜா நகர், பிருந்தாவன் நகர், ஆதிதிராவிடர் காலனி போன்ற தாழ்வான பகுதிகளிலும், மழை நீர் தேங்கியது.

முல்லை நகர் - சத்தியமூர்த்தி நகர் வரை, மணலி விரைவு சாலையில், தொடர் மழையால் தேங்கிய மழை நீர் வெளியேற வழியின்றி, கடல் போல் காட்சியளிக்கிறது. மணலி விரைவு சாலை வெள்ளக்காடானதால் சுப்ரமணியம் நகர், மதுரா நகர், ஜோதி நகர், முருகப்பா நகர், முல்லை நகர்களின் பிரதான சாலைகள் மழை நீரால் துண்டிக்கப்பட்டுள்ளன. ஜோதி நகர் அம்மா உணவகம், வார்டு அலுவலகம்,துாய்மை பணியாளர்கள் அலுவலகங்களை மழை நீர் சூழ்ந்துள்ளது.

தொடர் மழை காரணமாக மூடப்படும் அம்பேத்கர் நகர் - மாணிக்கம் நகர் இணைப்பு ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரை, மின் மோட்டர்கள் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.கொரட்டூர்சென்னை அம்பத்துார் மண்டலத்தில் உள்ள கொரட்டூர் ஏரி, 590 ஏக்கர் கொண்டது. பல ஆண்டுகளாக மழைக்காலத்தின் போது, மழை நீருடன், கழிவு நீரும் ஏரிக்குள் விடப்பட்டு வருகிறது.

ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க, ௨௦௧௬ல் உத்தரவிடப்பட்டது. ஆனாலும், பலத்த மழையின் போது, ஏரியின் கரையை உடைத்து, மழை நீருடன் கழிவு நீரும் விடப்படுகிறது. இதே அட்டூழியம் நேற்றும் அரங்கேறியது. பலத்த மழை பெய்ததால் கருக்கு, டி.டி.பி., காலனி அருகே, கொரட்டூர் ஏரி கரை பகிரங்கமாக உடைக்கப்பட்டு, மழை நீருடன், அம்பத்துார் தொழிற்பேட்டையில் உள்ள, 2,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலை, அடுக்குமாடி குடியிருப்பு, பாதாள சாக்கடை இணைப்பு மற்றும் செயல்படாத கழிவு நீரகற்று நிலையங்களில் இருந்து வெளியேறும் மொத்த கழிவு நீரும் ஏரிக்குள் விடப்பட்டது.

மாதவரம்மாதவரம் மண்டலத்தில், 200 அடி சாலையை ஒட்டிய பொன்னியம்மன்மேடு, தணிகாசலம் நகர், மெஜஸ்டிக் நகர் உள்ளிட்ட, 30 இடங்கள் தாழ்வான பகுதியாக கண்டறியப்பட்டுள்ளன.கடந்தாண்டு போல் இந்தாண்டு மழை பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால், நேற்று முன்தினம் நாள் முழுதும் தொடர்ந்து பெய்த மழையால், மேற்கண்ட பகுதிகள் மட்டுமின்றி, மாதவரம்மண்டலம் முழுக்க மழை வெள்ளத்தில் சிக்கியது. ஆங்காங்கே, சில மணி நேரம் மின் தடையும் நீடித்தது.

மிதக்குது முதல்வர் தொகுதி

வட சென்னையில், முதல்வர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்துார் உட்பட புளியந்தோப்பு, ஓட்டேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிந்து செல்ல வழி இல்லாததால், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.கொளத்துார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மகாத்மா காந்தி நகரில், 11 தெருக்களில் மழை நீர் தேங்கியது.

பெரம்பூர், மேல்பட்டி பொன்னம்மாள் சாலை, திரு.வி.க.நகர் மண்டலம், 70வது வார்டுக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், அருந்ததி நகரில் 20 தெருக்களிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. ஓட்டேரி, கொன்னுார் நெடுஞ்சாலை ஓரம் உள்ள ஏகாங்கிபுரம் கால்வாய் நிரம்பியதால், கொன்னுார் நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.புளியந்தோப்பு, பட்டாளம் பகுதியிலுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் மழை நீர் புகுந்து மார்பளவு தண்ணீர் தேங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X