பொது செய்தி

இந்தியா

படிக்காத கைதிக்கு கல்வி கற்பிப்பு; மைசூரின் மத்திய சிறையில் அமல்

Added : நவ 07, 2021
Share
Advertisement
மைசூரு : பல்வேறு குற்றங்களில் கைதாகி சிறையில் அடைபட்ட படிக்காத கைதிகளுக்கு கல்வி கற்பிக்கும் நோக்கில் கர்நாடக அரசு வகுத்த, 'கல்வியால் மாற்றம்' திட்டம், மைசூரின் மத்திய சிறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.படிப்பறிவில்லாத கைதிகளை படித்தவர்களாக்க, 'கல்வியால் மாற்றம்' என்ற திட்டத்தை செயல்படுத்தியது.இத்திட்டம் பெலகாவி, ஷிவமொகா, தார்வாட், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா

மைசூரு : பல்வேறு குற்றங்களில் கைதாகி சிறையில் அடைபட்ட படிக்காத கைதிகளுக்கு கல்வி கற்பிக்கும் நோக்கில் கர்நாடக அரசு வகுத்த, 'கல்வியால் மாற்றம்' திட்டம், மைசூரின் மத்திய சிறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

படிப்பறிவில்லாத கைதிகளை படித்தவர்களாக்க, 'கல்வியால் மாற்றம்' என்ற திட்டத்தை செயல்படுத்தியது.இத்திட்டம் பெலகாவி, ஷிவமொகா, தார்வாட், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை உட்பட பல்வேறு சிறைகளில் செயல்படுத்தியுள்ளனர்.மைசூரின் மத்திய சிறையில் கைதிகளுக்கு தொடக்க கல்வி முதல் பட்டப்படிப்பு வரை கல்வியளிக்கும் நடைமுறை உள்ளது.

இந்த சிறையில் 36 பெண் கைதிகள், 401 ஆண் கைதிகள் உள்ளனர். இவர்களுக்கு பாடம் நடத்த படித்த கைதிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. இவர்கள், மற்ற கைதிகளுக்கு பாடம் கற்றுத்தருகின்றனர்.தினமும் இரண்டு மணி நேரம் வகுப்பு நடத்தப்படுகிறது. 24 அத்தியாயம் கொண்ட புத்தகத்தில் உள்ள பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. எழுதுவது, படிப்பது, பொது அறிவு, கணக்கு கற்று கொடுக்கப்படுகிறது.மைசூரு சிறையின் உயர் அதிகாரி திவ்யஸ்ரீ கூறியதாவது:

தற்போது பாடம் கற்கும் கைதிகளுக்கு மார்ச்சில் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள், தேசிய திறந்தவெளி பள்ளி மூலம், எஸ்.எஸ்.எல்.சி.,யில் சேரலாம்.அதன்பின் கர்நாடக மாநில திறந்த வெளி பல்கலைக்கழகம், இக்னோ கிளை மூலம் பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு படிக்கலாம்.சிறை கைதிகளுக்கு கல்வியளிக்கும் நிகழ்ச்சி, தொடர்ந்து நடக்கும். கல்வி மூலம் அவர்களுக்கு மனமாற்றம் ஏற்படுத்தப்படுகிறது. அவர்கள் சிறையிலிருந்து விடுதலையான பின், தவறு செய்யாமல் நல்ல வாழ்க்கை நடத்த படிப்பு உதவியாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X