பொது செய்தி

இந்தியா

புனித் சமாதி இடத்துக்கு வருவோர் அதிகரிப்பு இளம் ஜோடிகள் திருமணம் செய்ய துடிப்பு

Added : நவ 07, 2021
Share
Advertisement
பெங்களூரு : முந்தைய வாரம் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் சமாதி இடத்துக்கு அஞ்சலி செலுத்த வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. சமாதி முன் திருமணம் செய்து கொள்ள இளம் ஜோடிகள் விரும்புகின்றனர்.அனைவராலும் 'அப்பு' என அழைக்கப்பட்ட நடிகர் புனித், அக்டோபர் 29ல் மாரடைப்பால் இறந்தார். பெங்களூரின் கண்டீரவா ஸ்டுடியோவில் அவருக்கு சமாதி

பெங்களூரு : முந்தைய வாரம் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் சமாதி இடத்துக்கு அஞ்சலி செலுத்த வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

சமாதி முன் திருமணம் செய்து கொள்ள இளம் ஜோடிகள் விரும்புகின்றனர்.அனைவராலும் 'அப்பு' என அழைக்கப்பட்ட நடிகர் புனித், அக்டோபர் 29ல் மாரடைப்பால் இறந்தார். பெங்களூரின் கண்டீரவா ஸ்டுடியோவில் அவருக்கு சமாதி அமைக்கப்பட்டுள்ளது.தினமும் இங்கு ஏராளமான ரசிகர்கள், பொது மக்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

நேற்றும் கூட ஏராளமானோர் வந்தனர்.பல்லாரியிலிருந்து குருப்பிரசாத், கங்கா நேற்று வந்திருந்தனர். இவர்கள் இரண்டு ஆண்டாக காதலிக்கின்றனர். புனித்தின் தீவிர ரசிகர்கள். தங்கள் பெற்றோர் சம்மதத்துடன், இருவரும் இங்கு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.நடிகர் ராகவேந்திரா ராஜ்குமார் கூறியதாவது:இளஞ்ஜோடிகள் ஒன்று, புனித் சமாதி முன் திருமணம் செய்ய விரும்புகின்றனர். இவர்களுக்கு அனுமதியளித்தால், நாளை மற்றொரு ஜோடி வருவர். எனவே நாங்கள் சம்மதிக்கவில்லை.தங்களின் தாய், தந்தையுடன் வந்நால் மட்டுமே, திருமணம் செய்து கொள்ள வாய்ப்பளிப்போம். அப்பு என்றால் அன்பின் அடையாளம். அவருக்கு கெட்ட பெயர் ஏற்படக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X