பொது செய்தி

தமிழ்நாடு

சைதாப்பேட்டை, கோட்டூர்புரத்தில் ஆற்றங்கரையோரம் அமைச்சர் ஆய்வு

Added : நவ 07, 2021
Share
Advertisement
சைதாப்பேட்டை : அடையாறு ஆற்றை ஒட்டி உள்ள சைதாப்பேட்டை, கோட்டூர்புரத்தில், வெள்ள பாதிப்பு பகுதிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பார்வையிட்டார்.கன மழையால், அடையாறு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறந்ததால், வெள்ளம் வழக்கத்தை விட அதிகமாக பாய்ந்து சென்றது.ஆற்றங்கரை பகுதியில் வசிப்போரை பாதுகாப்பான இடங்களில்
 சைதாப்பேட்டை, கோட்டூர்புரத்தில்  ஆற்றங்கரையோரம் அமைச்சர் ஆய்வு

சைதாப்பேட்டை : அடையாறு ஆற்றை ஒட்டி உள்ள சைதாப்பேட்டை, கோட்டூர்புரத்தில், வெள்ள பாதிப்பு பகுதிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

கன மழையால், அடையாறு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறந்ததால், வெள்ளம் வழக்கத்தை விட அதிகமாக பாய்ந்து சென்றது.ஆற்றங்கரை பகுதியில் வசிப்போரை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

குறிப்பாக, சைதாப்பேட்டை.செட்டிதோட்டம், ஆத்துமா நகர் மற்றும் கோட்டூர்புரம், சித்ரா நகர் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கு, மாநகராட்சி அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி உள்ளனர்.இந்த பகுதிகளை, தொகுதி எம்.எல்.ஏ.,வும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

ஆற்றுப்பாலத்தின் கீழ்பகுதியில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களில்தங்க வைக்கவும், கிண்டி, ஈக்காட்டுதாங்கல், சிட்கோ வளாகம் பகுதியில், சூழ்ந்த வெள்ளத்தை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பின், செட்டிதோட்டம்பகுதி மக்களுக்கு, உணவு வழங்கினார். ஆற்றில் வெள்ளம் அதிகரித்தால், அருகில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தங்க வைக்க, மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X