பாக்., வெற்றியை கொண்டாடிய மனைவி மீது கணவர் புகார்

Added : நவ 07, 2021
Share
Advertisement
ராம்பூர்-'டி - 20' கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதை, தன் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் கொண்டாடியதாக உத்தர பிரதேச போலீசில் கணவர் புகார் அளித்துள்ளார்.உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ராம்பூரைச் சேர்ந்த இஷான் மியா என்பவர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.அதில், 'கடந்த மாதம் 24ல் நடந்த இந்தியா - பாக்., இடையிலான

ராம்பூர்-'டி - 20' கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதை, தன் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் கொண்டாடியதாக உத்தர பிரதேச போலீசில் கணவர் புகார் அளித்துள்ளார்.

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ராம்பூரைச் சேர்ந்த இஷான் மியா என்பவர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.அதில், 'கடந்த மாதம் 24ல் நடந்த இந்தியா - பாக்., இடையிலான டி - 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாக்., அணி வென்றதை, என் மனைவி ரபியா ஷம்சி மற்றும் அவரது உறவினர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். 'அந்த கொண்டாட்ட 'வீடியோ'க்களை, 'வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசாக' வைத்துள்ளனர்' என புகார் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில், ரபியா ஷம்சி உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இஷான் மியா - ரபியா ஷம்சி தம்பதி திருமணமான சில மாதங்களிலேயே பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. தன் பெற்றோர் வீட்டில் வசிக்கும் ரபியா, தன் கணவர் வரதட்சணை கொடுமை செய்வதாக போலீசில் ஏற்கனவே வழக்கு பதிவு செய்துள்ளார்.எனவே, இஷானின் புகார் மீதான உண்மைத்தன்மை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X