சில வரி செய்திகள்...| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சில வரி செய்திகள்...

Added : நவ 07, 2021
Share
நிதி தடுமாற்றம்!எக்காரணம் கொண்டும் கிராம பஞ்சாயத்து அபிவிருத்தி பணிகளுக்கு நிதியை நிறுத்த போவதில்லை. ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கு 1,000 கோடி ரூபாயும், கூடுதலாக 117 கோடி ரூபாயும் வழங்கிட்டதா பஞ்சாயத்து துறை மந்திரி கொடுத்ததை சொல்கிறாரு. ஆனால், தெரு விளக்குகளின் கரன்ட் பில் கட்டுவதற்கு கிராம பஞ்சாயத்துகளில் நிதி நெருக்கடியா இருக்குதாம். 15 வது நிதி திட்டத்தில்

நிதி தடுமாற்றம்!

எக்காரணம் கொண்டும் கிராம பஞ்சாயத்து அபிவிருத்தி பணிகளுக்கு நிதியை நிறுத்த போவதில்லை. ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கு 1,000 கோடி ரூபாயும், கூடுதலாக 117 கோடி ரூபாயும் வழங்கிட்டதா பஞ்சாயத்து துறை மந்திரி கொடுத்ததை சொல்கிறாரு. ஆனால், தெரு விளக்குகளின் கரன்ட் பில் கட்டுவதற்கு கிராம பஞ்சாயத்துகளில் நிதி நெருக்கடியா இருக்குதாம்.

15 வது நிதி திட்டத்தில் ஒதுக்கிய தொகையில் 60 சதவீதம் அரசு திரும்ப பெற்றுக்கொண்டதாம்.பஞ்சாயத்து அலுவலக ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்க தட்டுப்பாடு இருக்குதாம். இந்த லட்சணத்துல கிராம பஞ்சாயத்துகள் மூலம் அபிவிருத்தி பணிகள் முடங்கி கிடக்காமல் ஜரூரா வேலை எப்புடி நடக்கும்

.மாநிலத்தில் கிராம வளர்ச்சி அறிவிப்புகளுக்கு பஞ்சமில்லையாம். அதை நிறைவேற்ற நிதி நிலை கவலைக்கிடமாக இருக்குதுன்னு விபரம் அறிந்தவங்க சொல்றாங்களே; இது நெஜமாவான்னு கிராமத்துகாரங்க பேசிக்கிறாங்க.ஷாக் ஆகலை!புல்லுக்கட்டு கட்சியில் இருந்து சில எம்.எல்.ஏ.,கள் கட்சி தாவுவாங்கன்னு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே இக்கட்சியின் 'மாஜி' முதல்வருக்கு தெரியுமாம்.

அதனால் கட்சியை விட்டு ஓடிட போறாவங்களால தனக்கு 'ஷாக்' ஏற்படலன்னு அவரு சிம்பிளா கூறியிருக்காரு.கை காரங்களோட கட்சி பெரிய சக்தியுள்ளதா ஒண்ணும் வளரல. பிற கட்சிக்காரர்களை இழுத்து பலம் சேக்குறாங்க. இது தெரிந்த கதை தான்னு கூலா சொல்லியிருக்காரு.30 சதவீதம் கிளியர்!இடைத்தேர்தலில் மூழ்கி இருந்ததால் முதல்வர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் கோப்புக்கள் குவிந்து தேக்கமாகி விட்டதாம்.

இதற்கு மேலும் கோப்புகளை பைசல் செய்யாவிட்டால் நல்லதல்லன்னு முடிவுக்கு வந்த அவர், தேக்கமான பல கோப்புகளுக்கு கையெழுத்து போடும் கடமையில் தீவிரம் காட்டினாராம். இது, முதல்வர் அலுவலக அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கு.சில முக்கிய கோப்புகள் பற்றிய விபரங்களை துருவி துருவிக் கேட்டு அதிர வைத்தாராம். 30 சதவீத கோப்புகள் ஒரே நாளில் கையெழுத்து ஆகிவிட்டதாக வட்டார தகவல்கள் கூறுகிறது

.பாஸ் ஆவாரா?

கை கட்சியின் ஸ்டேட் தலைவரு ஹனகல் கிராம தேவி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்தாரு. 'ஹனகல் ரிசல்ட்' பெருமையா கிடைச்சிருக்காம். அடுத்த அசம்பிளி தேர்தலில் கை கட்சியை ஆட்சியில் அமர்த்தும் முன்னோட்டமே ஹனகல் தீர்ப்புன்னு பேச வைத்திருக்கு. இத்தொகுதிக்கு மட்டுமல்ல, மாநிலம் முழுவதும் அபிவிருத்தி பணிகள் நிறைவேற கிராம தேவி அம்மன் அருள் கிடைக்கும் நம்பிக்கை ஏற்பட்டிருக்குதுன்னு கூறியிருக்காரு. பெரும்பான்மை பலம் காங்கிரசுக்கு கிடைச்சாலும் இவரோட முதல்வர் இலக்கு பாஸாகுமா என்பது தான் அவருக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தி இருக்குதாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X