தமிழ்நாடு

மழைக்கால விபத்து தடுப்பு 13 பேரிடர் மீட்பு குழு நியமனம்

Added : நவ 07, 2021
Share
Advertisement
சென்னை : சென்னையில், வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் மழைக்கால விபத்துகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கவும், அவசர அழைப்பிற்கு இடம் தேடி உதவிகள் செய்ய வசதியாக, 13 காவலர் பேரிடர் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.இக்குழு, எஸ்.ஐ., தலைமையில், ஆயுதப்படை போலீசாருடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில், நீச்சல் மற்றும் வெள்ள நிவாரண பணிகளில் அனுபவம் உள்ள, 10 போலீசார் இடம்

சென்னை : சென்னையில், வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் மழைக்கால விபத்துகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கவும், அவசர அழைப்பிற்கு இடம் தேடி உதவிகள் செய்ய வசதியாக, 13 காவலர் பேரிடர் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு, எஸ்.ஐ., தலைமையில், ஆயுதப்படை போலீசாருடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில், நீச்சல் மற்றும் வெள்ள நிவாரண பணிகளில் அனுபவம் உள்ள, 10 போலீசார் இடம் பெற்றுள்ளனர். அதன்படி, 12 மாவட்டங்களுக்கும் சிறப்பு காவலர் பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஒரு மீட்பு குழுவினர், சென்னை ராஜரத்தினம் ஆயுதப்படை மைதானத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்களை, கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று பார்வையிட்டார். மேலும், மீட்பு குழுவினர் ஈடுபட வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார். இதில், சென்னை ஆயுதப்படை துணை கமிஷனர்கள் சவுந்தரராஜன், கோபால உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X