பொது செய்தி

இந்தியா

பா.ஜ., - எம்.பி., முனிசாமியிடம் பங்கார்பேட்டை பா.ஜ.,வினர் வாக்குவாதம்

Added : நவ 07, 2021
Share
Advertisement
பங்கார்பேட்டை : பங்கார்பேட்டை ரயில்வே அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த கோலார் பா.ஜ., - எம்.பி., முனிசாமியிடம் பங்கார்பேட்டை பா.ஜ.,வினர் வாக்குவாதம் செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது. ரயில்வே அபிவிருத்தி பணிகள் உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து பங்கார்பேட்டை ரயில் நிலையத்தில் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்திற்கு வந்திருந்த பா.ஜ., -- எம்.பி., முனிசாமி தனது

பங்கார்பேட்டை : பங்கார்பேட்டை ரயில்வே அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த கோலார் பா.ஜ., - எம்.பி., முனிசாமியிடம் பங்கார்பேட்டை பா.ஜ.,வினர் வாக்குவாதம் செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

ரயில்வே அபிவிருத்தி பணிகள் உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து பங்கார்பேட்டை ரயில் நிலையத்தில் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்திற்கு வந்திருந்த பா.ஜ., -- எம்.பி., முனிசாமி தனது சில ஆதரவாளருக்கு மட்டும் தகவல் தெரிவித்திருந்தார்.ஆனால், பங்கார்பேட்டை நகர பா.ஜ., வினருக்கு அழைப்பு விடுக்கவில்லை. அவர்கள் ரயில் நிலையத்திற்கு வந்த போதும் கண்டு கொள்ள வில்லை.

இதனால் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் மகேஷ், எம்.பி.,யிடம் கேள்வி கேட்டு தகராறு செய்தார். 'உங்களுக்கு தங்கவயல் பா.ஜ., தலைவர் மட்டுமே ஒஸ்தியா' என கேட்டதற்கு, அது பற்றி நீங்கள் பேசக்கூடாதென எம்.பி., கூறியுள்ளார்.இதனால் கோபம் அடைந்த பா.ஜ.,வினர் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறினர். அவர்களை சமாதானப்படுத்தி அழைக்க வில்லை.இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X