தமிழ்நாடு

வெள்ள அபாய பகுதிகள் தீவிர கண்காணிப்பு

Added : நவ 07, 2021
Share
Advertisement
தாம்பரம் : வெள்ள பாதிப்பு பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.கன மழையால், அடையாறு ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும், செம்பரம்பாக்கம் ஏரியில், திறக்கப்பட்ட உபரிநீர் அடையாறு ஆற்றில் வருவதாலும், ஆற்றங்கரையோரம் உள்ள மண்ணிவாக்கம், முடிச்சூர், திருநீர்மலை பகுதிகளில், வெள்ள பாதிப்பு

தாம்பரம் : வெள்ள பாதிப்பு பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

கன மழையால், அடையாறு ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும், செம்பரம்பாக்கம் ஏரியில், திறக்கப்பட்ட உபரிநீர் அடையாறு ஆற்றில் வருவதாலும், ஆற்றங்கரையோரம் உள்ள மண்ணிவாக்கம், முடிச்சூர், திருநீர்மலை பகுதிகளில், வெள்ள பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.இப்பகுதிகளில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, அவர்களுக்கு உத்தரவிட்டார்.

இது குறித்து, கலெக்டர் ராகுல்நாத் கூறியதாவது:மாவட்டத்தில் வழக்கத்தை விட, 20 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. வெள்ள பாதிப்பு அபாயம் உள்ள பகுதிகளில், ஆய்வு செய்தோம். செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால், மண்ணிவாக்கம், முடிச்சூர், திருநீர்மலை பகுதிகளில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.ஏரியில் இருந்து, 2,500 கன அடி நீர் திறந்துவிடபட்டாலும், எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை, பெரியளவில் வெள்ள பாதிப்பு ஏதும் இல்லை. இருப்பினும், 280 முகாம்கள் தயாராக உள்ளன. தாழ்வான பகுதிகளில் தண்ணீரை வெளியேற்ற, டீசல் மோட்டார் பம்பு செட்டுகள், ஜே.சி.பி., இயந்திரங்கள், கிரேன் ஆகியவை தயாராக உள்ளன. வரும், 9ல் புயல் அபாய எச்சரிக்கை உள்ளதால், மின் வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். பாதிப்புகளில் இருந்து மீட்க, 200 படகுகள் தயார் நிலையில் உள்ளன.மதுராந்தகம் ஏரி நிரம்பும் நிலையில் உள்ளதால்,

ஆறு மதகுகள் வழியாக, உபரி நீர் வெளியேறி வருகிறது. ஒரு மணி நேரத்துக்கு, ஒரு முறை ஏரி கண்காணிக்கப்பட்டு, அதன் அறிக்கை எனக்கு அளிக்கப்பட்டு வருகிறது.இதுவரை மாவட்டத்தில், 119 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. 150 ஏரிகள், 75 சதவீதம் நிரம்பி உள்ளன. பாசனத்திற்கு பயன்படாத ஏரிகளில் இருந்து, 2 சதவீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X