பொது செய்தி

தமிழ்நாடு

மறுபடியும் களைகட்டியது மாநகராட்சி வ.உ.சி., பூங்கா

Added : நவ 07, 2021
Share
Advertisement
கோவை:தீபாவளி பண்டிகையை தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை நாட்களாக இருந்ததால், பூங்காவுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்தது.விடுமுறை நாட்களில் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க, கோவை வ.உ.சி., பூங்காவுக்கு பொதுமக்கள் வருவது வழக்கம். கொரோனா காரணமாக கோவையில் உள்ள பல மாநகராட்சி பூங்காக்கள் திறக்கப்படவில்லை. இப்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு இருப்பதால், கடந்த ஒரு
 மறுபடியும் களைகட்டியது மாநகராட்சி வ.உ.சி., பூங்கா

கோவை:தீபாவளி பண்டிகையை தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை நாட்களாக இருந்ததால், பூங்காவுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்தது.விடுமுறை நாட்களில் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க, கோவை வ.உ.சி., பூங்காவுக்கு பொதுமக்கள் வருவது வழக்கம். கொரோனா காரணமாக கோவையில் உள்ள பல மாநகராட்சி பூங்காக்கள் திறக்கப்படவில்லை. இப்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு இருப்பதால், கடந்த ஒரு மாதமாக பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகையை தொடர்ந்து, மூன்று நாட்கள் விடுமுறை நாட்களாக இருந்ததால், பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.கடந்த மூன்று நாட்களில், வ.உ.சி., பூங்காவுக்கு மட்டும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். வ.உ.சி. பூங்கா அருகில் உள்ள, மாநகராட்சி உயிரியல் பூங்காவை மட்டும், 8000 பேர் பார்வையிட்டுள்ளனர்.
நேற்று குடும்பத்துடன் பூங்காவுக்கு வந்திருந்த காட்டூர் பகுதியை சேர்ந்த தனபால் கூறுகையில், ''முன்பெல்லாம் சனி அல்லது ஞாயிறு நாட்களில், பூங்காவுக்கு குடும்பத்துடன் வருவேன். கொரோனா தொற்றுக்கு பிறகு இப்போதுதான் வந்திருக்கிறோம். ''மாலையில் மழை வரும் என்பதால், காலையிலேயே வந்து விட்டோம்,'' என்றார்.
அவசர அவஸ்தைக்குகழிப்பிடம் தேவை!
வ.உ.சி.,பூங்காவுக்குள் இருக்கும் கட்டண கழிப்பிடம் மூடி வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் வேறு எங்கும் பொதுக்கழிப்பிடம் இல்லை. இதனால் பூங்காவுக்கு வரும் பொதுக்கள் கழிப்பிட வசதி இல்லாமல், மிகவும் அவஸ்தைப்படுகின்றனர். சிலர் வேறு வழியில்லாமல் செடி மறைவை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் அங்குள்ள கட்டண கழிப்பிடத்தை திறக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X