பொது செய்தி

இந்தியா

இஸ்லாமிய பயங்கவாத அமைப்புகளை தடை செய்

Added : நவ 07, 2021
Share
Advertisement
தங்கவயல் : வங்க தேசத்தில் இந்து கோவில்களை இடித்து தள்ளியும், ஜம்மு - காஷ்மீரில் இந்துகளுக்கு தொடர்ந்து பாதிப்புகளை கொடுத்து வரும் இஸ்லாமிய பயங்கவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி தங்கவயல் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் நேற்று கண்டன ஊர்வலம் நடத்தினர். பரிஷத் தலைவர் ஸ்ரீதர்ராவ் சிந்தியா, திருவரங்கம், கணேஷ் ஆகியோர் முன்னிலையில் தங்கவயல் காந்தி
இஸ்லாமிய பயங்கவாத அமைப்புகளை தடை செய்

தங்கவயல் : வங்க தேசத்தில் இந்து கோவில்களை இடித்து தள்ளியும், ஜம்மு - காஷ்மீரில் இந்துகளுக்கு தொடர்ந்து பாதிப்புகளை கொடுத்து வரும் இஸ்லாமிய பயங்கவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி தங்கவயல் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் நேற்று கண்டன ஊர்வலம் நடத்தினர்.

பரிஷத் தலைவர் ஸ்ரீதர்ராவ் சிந்தியா, திருவரங்கம், கணேஷ் ஆகியோர் முன்னிலையில் தங்கவயல் காந்தி சதுக்கத்தில் இருந்து காவி கொடிகளுடன் ஊர்வலம் புறப்பட்டனர்.பிரிட்சர்ட் ரோடு, சொர்ணா நகர், கீதா சாலை வழியாக சுராஜ் மல் சதுக்கத்தில் வந்தடைந்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., சம்பங்கி, நகராட்சி உறுப்பினர்கள் விஜயகுமார், ஜாம் வெங்கடேஷ், காந்தி, மற்றும் பாண்டியன், கண்ட்லப்பா, ஜெயகுமார், மாரிகுப்பம் ரவி, மேகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.பயங்கரவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும்; இந்து கோவில்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X