குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது! சிசிடிவி கேமரா பொருத்த கமிஷனர் அறிவுறுத்தல்| Dinamalar

தமிழ்நாடு

குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது! சிசிடிவி கேமரா பொருத்த கமிஷனர் அறிவுறுத்தல்

Updated : நவ 08, 2021 | Added : நவ 07, 2021
Share
கோவை:வீடுகள், கட்டடங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்த விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 'பாதுகாப்பை கருத்தில் கொண்டு வீடுகளில் சிசிடிவி கேமரா பொருத்திக் கொள்வது மிகவும் நல்லது' என்கின்றனர், கோவை போலீசார்.வீடு, அபார்ட்மென்ட், வணிக கட்டடங்கள், சாலை சந்திப்புகள் போன்ற இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவது மிகவும் அத்தியாவசியம் என்ற நிலை
 குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது! சிசிடிவி கேமரா பொருத்த கமிஷனர் அறிவுறுத்தல்

கோவை:வீடுகள், கட்டடங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்த விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 'பாதுகாப்பை கருத்தில் கொண்டு வீடுகளில் சிசிடிவி கேமரா பொருத்திக் கொள்வது மிகவும் நல்லது' என்கின்றனர், கோவை போலீசார்.

வீடு, அபார்ட்மென்ட், வணிக கட்டடங்கள், சாலை சந்திப்புகள் போன்ற இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவது மிகவும் அத்தியாவசியம் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.குற்றச் சம்பவங்களை தடுக்கவும், குற்றம் நடந்து விட்டால், அதில் ஈடுபட்டவர்களை பிடிக்கவும் சிசிடிவி கேமரா பதிவுகள் பேருதவியாக இருக்கின்றன.
போலீசாரின் தொடர் அறிவுறுத்தல் காரணமாகவும், பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வாலும் சமீபகாலமாக வீடுகளில் சிசிடிவி பொருத்திக் கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடைகளிலும் விற்பனை உயர்ந்துள்ளது.

கோவை ராஜவீதியில் சிசிடிவி விற்பனை செய்யும் மணிகண்டன் கூறியதாவது:
முன்பெல்லாம் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், சாலையோர கட்டடங்களில் மட்டும் சிசிடிவி பொருத்திக் கொண்டிருந்தனர். இப்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால், வீடுகளுக்கும் சிசிடிவி கேமரா பொருத்துவது அதிகரித்துள்ளது.

இரவு பகல் என 24 மணி நேரமும் கண்காணிக்கும் நான்கு கேமரா, டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர், ஸ்டோரேஜ் 20 நாட்கள் இருக்கும் வகையில் அமைப்பதற்கு 12 ஆயிரத்து 800 ரூபாய் செலவாகும். வீடியோவின் தெளிவுத்தன்மையை பொறுத்து, செலவு அதிகரிக்கும். 5 மெகா பிக்சல் கொண்ட கேமரா பொருத்தினால், 18 ஆயிரம் ரூபாய் செலவாகும்.இவ்வாறு, மணிகண்டன் கூறினார்.கோவை, ராமநாதபுரம் பெர்க்ஸ் ஆர்ச் ரோடு ஸ்ரீ வாரி மானசரோவர் அபார்ட்மென்ட்ஸ் சங்க செயலாளர் அசோக் நவ்லி கூறியதாவது:சிசிடிவி கேமராக்கள், குடியிருப்போருக்கு ஒரு பாதுகாப்பான உணர்வை தருகின்றன.

எங்கள் அபார்ட்மென்டில் 9 ஆண்டுக்கு முன்பே சிசிடிவி கேமராக்கள் பொருத்தி விட்டோம். அவை மிகுந்த பயனுள்ளதாக இருப்பதாக, குடியிருப்போர் அனைவரும் கூறுகின்றனர்.அபார்ட்மென்ட் போன்ற பெரிய கட்டடங்களில் நுழைவாயில், லிப்ட், கார்டன், பேஸ்மென்ட், டெரஸ் என ஒவ்வொரு இடத்துக்கும், கேமரா பொருத்திக் கொள்வது மிகவும் சிறந்தது. செலவை பார்க்காமல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சிசிடிவி கேமரா பொருத்திக் கொள்வது நல்லது.இவ்வாறு, அசோக் நவ்லி தெரிவித்தார்.

'தேவையற்ற ஆட்கள் வருகையை தவிர்ப்பது, நடமாட்டத்தை கண்காணிப்பது, குற்றச்சம்பவங்களில் துப்பு துலக்குவதில் சிசிடிவி பதிவுகள் முக்கிய பங்காற்றுகின்றன. எனவே, பொதுமக்கள், குடியிருப்போர் சங்கங்கள் அனைவரும் சிசிடிவி கேமராக்களை நிறுவிக் கொள்ள முன்வர வேண்டும்' என்கின்றனர் போலீசார்.

'தரமானதை தேர்வு செய்யுங்க'கோவை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் கூறுகையில், ''சிசிடிவி கேமராக்களை வீடுகள், கட்டடங்களில் பொருத்துவது மிகவும் நல்லது. ''தொழில்நுட்ப ரீதியாக தரமான கேமராக்களை பொருத்துவது முக்கியம்.இரவு நேரங்களில் பதிவாகும் காட்சிகளும் தெளிவான முறையில் தெரியும் வகையிலான கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். வீடியோ காட்சி பதிவுகள் குறைந்தபட்சம் ஒரு மாதம் பாதுகாக்கும் வகையில் ஸ்டோரேஜ் இருக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X