பல்லாங்குழி சாலையால் தினமும் விபத்து

Added : நவ 07, 2021
Share
Advertisement
வடவள்ளி:வடவள்ளியில் இருந்து காளப்பநாயக்கன்பாளையம் செல்லும் சாலை, குண்டும் குழியுமாக இருப்பதால், நாள்தோறும் விபத்து ஏற்பட்டு வருகிறது.சோமையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், வடவள்ளி - காளப்பநாயக்கன்பாளையம் சாலை உள்ளது. இப்பகுதியில், ஏராளமான குடியிருப்புகளும், தொழிற்சாலைகளும், பள்ளிகளும் உள்ளன.இதனால், இந்த சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று
 பல்லாங்குழி சாலையால் தினமும் விபத்து

வடவள்ளி:வடவள்ளியில் இருந்து காளப்பநாயக்கன்பாளையம் செல்லும் சாலை, குண்டும் குழியுமாக இருப்பதால், நாள்தோறும் விபத்து ஏற்பட்டு வருகிறது.சோமையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், வடவள்ளி - காளப்பநாயக்கன்பாளையம் சாலை உள்ளது. இப்பகுதியில், ஏராளமான குடியிருப்புகளும், தொழிற்சாலைகளும், பள்ளிகளும் உள்ளன.இதனால், இந்த சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. கனரக வாகன போக்குவரத்தும் அதிகமாக உள்ளது.4 கி.மீ., தொலைவுள்ள இந்த சாலை, ஐந்து ஆண்டுகளுக்கு முன், புனரமைக்கப்பட்டது. மழை மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்தால், இந்த சாலையில், ஆங்காங்கே சிறு பள்ளங்கள் ஏற்பட்டன.அதை சீரமைக்காததால், தற்போது, இந்த சாலை முழுவதும் குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது, மழை பெய்து வருவதால், சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி, குளம் போல காட்சியளிக்கிறது.இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், இந்த குழிகளில் சிக்கி, அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்த சாலையை, விரைவில் சீரமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X