பொது செய்தி

தமிழ்நாடு

இயங்காத 'தமிழ் அன்னை': ரூ.1 கோடி வீணாகும் நிலை

Updated : நவ 09, 2021 | Added : நவ 07, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
கூடலுார்:கேரள அரசின் அனுமதி கிடைக்காததால், தேக்கடி ஏரியில், 'தமிழ் அன்னை' படகு காட்சிப் பொருளாக உள்ளது. பெரியாறு அணையில் சமீபத்தில் ஆய்வு செய்த அமைச்சர் துரைமுருகன், அப்படகு குறித்த கேள்விக்கு பதில் கூறாததால், 1 கோடி ரூபாய் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம், தேக்கடி படகு நிறுத்தப் பகுதியில் இருந்து, 14 கி.மீ., துாரமுள்ள முல்லை பெரியாறு அணைக்கு சென்று வர, தமிழக
 இயங்காத 'தமிழ் அன்னை': ரூ.1 கோடி வீணாகும் நிலை

கூடலுார்:கேரள அரசின் அனுமதி கிடைக்காததால், தேக்கடி ஏரியில், 'தமிழ் அன்னை' படகு காட்சிப் பொருளாக உள்ளது.

பெரியாறு அணையில் சமீபத்தில் ஆய்வு செய்த அமைச்சர் துரைமுருகன், அப்படகு குறித்த கேள்விக்கு பதில் கூறாததால், 1 கோடி ரூபாய் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம், தேக்கடி படகு நிறுத்தப் பகுதியில் இருந்து, 14 கி.மீ., துாரமுள்ள முல்லை பெரியாறு அணைக்கு சென்று வர, தமிழக பொதுப்பணித் துறைக்கு, 'கண்ணகி, ஜலரத்னா' என்ற இரண்டு படகுகள் உள்ளன.

இவை, 36 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளதால், 2014ல் பொதுப்பணித் துறையினர், 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'ஸ்டீல்' படகை வாங்கி தேக்கடி கொண்டு வந்தனர். இதற்கு, 'தமிழ் அன்னை' என பெயரிடப்பட்டது.


னுமதியில்லை

தேக்கடி ஏரியில் நிறுத்தி, ஏழு ஆண்டுகள் கடந்த நிலையில், இதை இயக்க இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. நிர்ணயிக்கப்பட்ட எச்.பி., திறனை விட, கூடுதல் திறன் இருப்பதாக கூறி, கேரள அரசு தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.அதே வேளையில், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தயாரித்ததாக, தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. இரு மாநில அரசுகளின் வெவ்வேறு கருத்துகளால், இதுவரை படகை இயக்க முடியவில்லை.


மழுப்பிய அமைச்சர்

நவம்பர் 5ல் அணை ஆய்வுக்கு வந்த அமைச்சர் துரைமுருகனிடம், தமிழ் அன்னை படகு இயக்குவதில் தாமதம் குறித்து, நிருபர்கள் இரு முறை கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் கூறாமல் மழுப்பிய அமைச்சர், 'கேரளாவை போல, விரைவில் தமிழக நீர்ப்பாசனத் துறை சார்பில், இரு விரைவு படகுகள் வாங்கப்படும்' என்றார்.இதனால், ஏற்கனவே வாங்கிய படகிற்காக செலவிடப்பட்ட 1 கோடி ரூபாய் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை இயக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
11-நவ-202105:34:23 IST Report Abuse
N Annamalai வேறு இடத்திற்கு கொண்டு செல்லலாம் .
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
11-நவ-202104:29:58 IST Report Abuse
meenakshisundaram ஐயோ இதை பொது மக்கள் கவனத்துக்கு கொண்டு செல்வதா ?வேண்டாம் இந்த படகை 'கலைஞர் ஓடம் 'என்று பெயர் மாற்றி திமுக (அரசு ) கட்டப்போகும் பார்க்குகளில் எதிலாவது நிறுத்தி வைக்கவும் -பல கோடி களுடன் இதுவும் சேரட்டும் .வாழ்க 'அண்ணா நாமம் '
Rate this:
Cancel
08-நவ-202112:22:21 IST Report Abuse
சம்பத் குமார் 1). ஒரு கோடி ரூபாய்க்கு அந்த படகில் என்ன இருக்கிறது.மீறினால் முப்பத்தி ஐந்து லட்ங்களுக்கு மேல் தாண்டாது.2). எந்த ஆட்சியில் வாங்கினதோ யாருக்கு தெரியும். எல்லாம் ஈசனுக்கே சமர்ப்பணம். நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X