அரசியல் செய்தி

தமிழ்நாடு

' மின் திட்டம் அமைக்க வேண்டும்: ராமதாஸ்

Added : நவ 07, 2021
Share
Advertisement
சென்னை-'புவி வெப்பமயமாதலின் தீய விளைவுகளை தடுக்க, ஊர்தோறும் மின் நிலையங்கள் அமைக்க வேண்டும்' என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை:கோவை மாவட்டம் ஓடந்துறை ஊராட்சியில், 2006ம் ஆண்டில், 0.35 மெகாவாட் திறன் உடைய காற்றாலை மின் உற்பத்தி; வீடுகளுக்கு தனித்தனியாக சூரிய ஒளிமின் திட்டம் போன்றவற்றை செயல்படுத்தியதால், அந்த கிராமம் மின்னுற்பத்தியில்

சென்னை-'புவி வெப்பமயமாதலின் தீய விளைவுகளை தடுக்க, ஊர்தோறும் மின் நிலையங்கள் அமைக்க வேண்டும்' என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:கோவை மாவட்டம் ஓடந்துறை ஊராட்சியில், 2006ம் ஆண்டில், 0.35 மெகாவாட் திறன் உடைய காற்றாலை மின் உற்பத்தி; வீடுகளுக்கு தனித்தனியாக சூரிய ஒளிமின் திட்டம் போன்றவற்றை செயல்படுத்தியதால், அந்த கிராமம் மின்னுற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி மிச்சமாகும் 2 லட்சம் யூனிட் மின்சாரத்தை, மின் வாரியத்திற்கு விற்பதன் வாயிலாக, 5 லட்சம் ரூபாய் வரை வருமானமும் கிடைக்கிறது.

இந்த ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டது போன்ற மரபு சாரா மின் திட்டங்களை, அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்த முடியும். வரும் 2025ம் ஆண்டுக்கு பின், புதிய நிலக்கரி மின் உற்பத்தி திட்டங்களை துவங்க முடியாது என்பதால், இத்திட்டம் அவசியம்.ஒவ்வொரு ஊராட்சியிலும் சராசரியாக 2 கோடி முதல், 3 கோடி ரூபாயில் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும். இதன் வாயிலாக மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு அடைய முடியும்; அதுமட்டுமின்றி, அடுத்த 10 ஆண்டுகளில் நிலக்கரியை எரிபொருளாக கொண்ட மின் உற்பத்தியையும் கைவிட முடியும். எனவே, இதற்கான சிறப்பு திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி, மத்திய அரசு உதவியுடன், உள்ளாட்சிகளுடன் இணைந்து செயல்படுத்த முன்வர வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்

.'விடுமுறையை நீடிக்க வேண்டும்'

பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி:தீபாவளியை கொண்டாடுவதற்காக, சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், விடுமுறை இன்றுடன் முடிவதை தொடர்ந்து, சென்னைக்கு திரும்ப முயல்வர். தொடர்மழை காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் போக்குவரத்து சிக்கலானதாகவும், நெருக்கடியானதாகவும் மாறியிருக்கிறது.சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் வெள்ள நிலைமை மோசமடைந்து வருவதால், சொந்த ஊர் சென்றுள்ள மக்கள், நிலைமை சீரடையும் வரை, அடுத்த சில நாட்களுக்கு சென்னை திரும்புவதை தவிர்க்க வேண்டும்.நிலைமை சீரடையும் வரை, அத்தியாவசிய பணிகள் தவிர்த்த பிற அரசு துறைகளுக்கும், பள்ளி, கல்லுாரிகளுக்கும் விடுமுறையை நீடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X