அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., ஆர்ப்பாட்டம்; த.மா.கா., ஆதரவு

Added : நவ 07, 2021
Share
Advertisement
சென்னை-''முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, அ.தி.மு.க., - பா.ஜ., நடத்தும் போராட்டங்களுக்கு, த.மா.கா., ஆதரவு அளிக்கிறது' என, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:முல்லை பெரியாறு அணை தொடர்பாக, தமிழக அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், நாளை தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற

சென்னை-''முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, அ.தி.மு.க., - பா.ஜ., நடத்தும் போராட்டங்களுக்கு, த.மா.கா., ஆதரவு அளிக்கிறது' என, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:முல்லை பெரியாறு அணை தொடர்பாக, தமிழக அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், நாளை தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.தமிழக பா.ஜ., சார்பில், இன்று தேனி மாவட்டத்தில் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு த.மா.கா., தார்மீக ஆதரவு அளிக்கிறது.முல்லை பெரியாறு அணை தொடர்பாக, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும். அணை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்தால் மட்டும் போதாது; தமிழகத்திற்கு உரிய நீரை பெறுவதில் அக்கறை காட்ட வேண்டும். இவ்வாறு வாசன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X