அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' மந்திரிக்கு பாதுகாப்பு வாபஸ் எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்

Added : நவ 07, 2021
Share
Advertisement
சென்னை-முன்னாள் அமைச்சர் சண்முகத்திற்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதற்கு, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், 2006 சட்டசபை தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் போட்டி யிட்டார். அப்போது அவரது அரசியல் எதிரிகள் வீடு புகுந்து, அவர் மீது தாக்குதல் நடத்தினர். இதில், அதிர்ஷ்டவசமாக

சென்னை-முன்னாள் அமைச்சர் சண்முகத்திற்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதற்கு, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்

.அவரது அறிக்கை:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், 2006 சட்டசபை தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் போட்டி யிட்டார். அப்போது அவரது அரசியல் எதிரிகள் வீடு புகுந்து, அவர் மீது தாக்குதல் நடத்தினர். இதில், அதிர்ஷ்டவசமாக சண்முகம் உயிர் தப்பினார்.இந்த தாக்குதலில், அ.தி.மு.க., தொண்டர் முருகானந்தம் கொல்லப்பட்டார். வழக்கு விசாரணை நடந்து வருகிறது. சண்முகம் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தக்கூடிய அச்சுறுத்தல் உள்ளதால், அவரது வீட்டிற்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

அவர் வெளியில் சென்றால், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிக்கு சென்றனர்.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகும் பாதுகாப்பு தொடர்ந்தது. தற்போது திடீரென பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டு உள்ளது.அ.தி.மு.க., தொண்டர் முருகானந்தம் கொலை வழக்கு விசாரணை, 19ம் தேதி நடக்க உள்ள சூழ்நிலையில், போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்துள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது.முன்னாள் அமைச்சர் சண்முகத்திற்கு அளித்து வந்த போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெற்றதை, அ.தி.மு.க., சார்பில் கடுமையாக கண்டிக்கிறேன்.அவர் மீது ஏதேனும் தாக்குதல் நடந்தால், அதற்கு தி.மு.க., அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.இவ்வாறு பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X