அரசியல் செய்தி

தமிழ்நாடு

முல்லை பெரியாறுக்கு பன்னீர் போனது எப்போ? தேதிகளை வெளியிட துரைமுருகன் வலியுறுத்தல்!

Added : நவ 07, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை-'முல்லை பெரியாறு அணைக்கு சென்று வந்த தேதிகளை பன்னீர்செல்வம் வெளியிடுவாரா?' என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.தார்மீக உரிமை இல்லைஅவரது அறிக்கை:முல்லை பெரியாறு அணைக்கு 5ம் தேதி சென்று வந்து, பத்திரிகையாளர்களை சந்தித்தேன். அப்போது, 'அ.தி.மு.க., ௧௦ ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும், ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., ஒரு முறை கூட அணையை சென்று பார்த்ததில்லை.
 முல்லை பெரியாறுக்கு பன்னீர் போனது எப்போ? தேதிகளை வெளியிட துரைமுருகன் வலியுறுத்தல்!

சென்னை-'முல்லை பெரியாறு அணைக்கு சென்று வந்த தேதிகளை பன்னீர்செல்வம் வெளியிடுவாரா?' என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தார்மீக உரிமை இல்லைஅவரது அறிக்கை:முல்லை பெரியாறு அணைக்கு 5ம் தேதி சென்று வந்து, பத்திரிகையாளர்களை சந்தித்தேன். அப்போது, 'அ.தி.மு.க., ௧௦ ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும், ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., ஒரு முறை கூட அணையை சென்று பார்த்ததில்லை. எனவே, முல்லை பெரியாறு அணையை முன்வைத்து போராட்டம் நடத்த, அவர்களுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை' என்றேன். அதற்கு பன்னீர்செல்வம், '14 தடவை முல்லை பெரியாறு அணைக்கு போயிருக்கிறேன்' என்று பதில் அளித்துள்ளார்.

அது எந்தெந்த தேதிகளில் என்பதை தெரிவிக்க வேண்டும்.தேதியை அவர் குறித்து வைக்கவில்லை என்றாலும், பொதுப்பணி துறையில் குறித்து வைத்திருப்பர். அந்த குறிப்பை, 'காலண்டர்' என்பர்.அந்த தேதிகளை குறிப்பிட்டு சொன்னால், அது காலண்டரில் பதிவாகி இருந்தால், 'சபாஷ்' என்று நானே பாராட்டுகிறேன். முல்லை பெரியாறு அணைக்கு சென்று வந்ததற்கு ஆதாரமாக, 'நான் ஒரு முறை போய், மலர் துாவி தண்ணீரை திறந்து வைத்து விட்டு வந்தேன்' என்று கூறுகிறார்.

எல்லா அணைகளிலும், அணையின் மேலிருந்து தான் தண்ணீரை திறப்பர். முல்லை பெரியாறு அணையில் விசித்திரமாக, அணையின் பின் பகுதியில் இருந்து தான் தண்ணீரை திறப்பர். ஏனெனில் நாம் அணையின் பின் பகுதியில் இருந்து, குழாய்கள் வழியே தண்ணீர் எடுத்து, மின் தயாரிப்புக்கு பயன்படுத்திய பின், அதை பாசனத்திற்கு விடுகிறோம்.

நாம் தண்ணீர் எடுக்கும் இடத்தில் இருந்து, முல்லை பெரியாறு அணைக்கு செல்ல, ஒன்றரை மணி நேரமாகும். தண்ணீர் எடுக்கும் இடத்தில் இருந்து, அணையை பார்க்கக்கூட முடியாது. சுருக்கமாக சொன்னால், அணையின் நீரை தொட்டு விட்டு வந்திருக்கிறாரே தவிர, அணையை கண்டு விட்டு வரவில்லை.சட்டம் கொண்டு வந்ததுஅடுத்து, உச்ச நீதிமன்ற ஆணையை செயல்படுத்தாமல் இருக்கும் வகையில், கேரள அரசு ஒரு சட்டத்தை கொண்டு வந்தது.அதை எதிர்த்து ஜெயலலிதா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, முல்லை பெரியாறு உரிமையை காத்தவர் என்று பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.நீதிமன்றத்தில் யாராவது வழக்கு போட்டால், அந்த வழக்குக்கு நம்பர் வாங்கினால் தான், விசாரணைக்கு வரும்.இல்லாவிட்டால் அந்த வழக்கின் கதி அதோகதி தான். இங்கே அதுதான் நடந்தது.

ஜெயலலிதா பெயரளவுக்கு வழக்கு தொடுத்தாரே தவிர, நம்பர் வாங்காமலேயே விட்டு விட்டார். அடுத்து ஆட்சிக்கு வந்த கருணாநிதி தான், அந்த வழக்குக்கு நம்பர் வாங்கி, வழக்கு முடித்து வென்றார்.போட்ட வழக்குக்கு, பல மாதங்களாக நம்பர் கூட வாங்காதவரை தான், 'முல்லை பெரியாறு காத்த அம்மணி' என்கிறார் பன்னீர்செல்வம்.இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
08-நவ-202121:30:19 IST Report Abuse
Dinesh Pandian அவரு ஊரே அது தானே , உங்க தொகுதிக்கு எப்போ போனீங்கன்னு கூட கேப்பாரு போல
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
08-நவ-202114:41:17 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் "ஜெயலலிதா பெயரளவுக்கு வழக்கு தொடுத்தாரே தவிர, நம்பர் வாங்காமலேயே விட்டு விட்டார். அடுத்து ஆட்சிக்கு வந்த கருணாநிதி தான், அந்த வழக்குக்கு நம்பர் வாங்கி, வழக்கு முடித்து வென்றார். " ஆக ஆக ஆக பிரச்னையை தீர்க்கிறது பெரிசில்ல நம்பரை வாங்கி ரிஜிஸ்டரில் எழுதுவதுதான் கடினமான பணி அதை செய்த எங்கள் தயிர்வடை புகழ் ஓங்குக
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
08-நவ-202113:21:27 IST Report Abuse
raja அத டீடைலு எல்லாம் நம்ப செந்திலு வச்சிருக்காரு...சரியா கட்டத்துறை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X