அரசியல் செய்தி

தமிழ்நாடு

நிவாரண பணி துரிதமாக நடக்குது: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

Added : நவ 07, 2021
Share
Advertisement
சென்னை-'தமிழகத்தில் மழை நிவாரண பணிகள், துரிதமாக நடந்து வருகின்றன' என்று வருவாய்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:வடகிழக்கு பருவ மழை, அக்டோபர், 1 முதல் நேற்று வரை 33 செ.மீ., பெய்துள்ளது. இது இயல்பைவிட 43 சதவீதம் கூடுதல். 60 சதவீதம்அரியலுார், கோவை உட்பட 12 மாவட்டங்களில், இயல்பை விட 60 சதவீதத்திற்கு மேல் மழை

சென்னை-'தமிழகத்தில் மழை நிவாரண பணிகள், துரிதமாக நடந்து வருகின்றன' என்று வருவாய்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:வடகிழக்கு பருவ மழை, அக்டோபர், 1 முதல் நேற்று வரை 33 செ.மீ., பெய்துள்ளது. இது இயல்பைவிட 43 சதவீதம் கூடுதல். 60 சதவீதம்அரியலுார், கோவை உட்பட 12 மாவட்டங்களில், இயல்பை விட 60 சதவீதத்திற்கு மேல் மழை பெய்துள்ளது.

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டோர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 166 தெருக்கள், 13 சுரங்கப் பாதைகளில் தேங்கிய நீர், ராட்சத பம்புகள் வழியே அகற்றப்படுகிறது.சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், கனமழை பெய்து வருவதால், இந்த மாவட்டங்களில் உள்ள பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் நீர்த்தேக்கங்களில் இருந்து, உபரி நீர் திறந்து விடப்படுகிறது. எனவே, இந்த உபரி நீர் செல்லும் ஆற்றின் கரையோர மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி, 4.09 லட்சம் பேரின், மொபைல் போன் எண்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டுள்ளது.

வரும், 9ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும். இதனால், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில், கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தயார் நிலைபேரிடர்களின் போது மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்த, தேசிய பேரிடர் மீட்பு படையின் இரண்டு குழுக்கள் மதுரைக்கும்; செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சாவூர், கடலுார் மாவட்டங்களுக்கு, தலா ஒரு குழுவும் அனுபப்பட்டுள்ளன.

தீயணைப்பு துறை தயார் நிலையில் உள்ளது. மீன்வளத்துறை சார்பில், போதுமான படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடலோர மாவட்டங்களில், 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5,106 நிவாரண முகாம்களும் தயாராக உள்ளன. பேரிடர் காலங்களில் ஹெலிகாப்டர்கள் இறங்க, ஹெலிபேட் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிவாரண உதவிகளை தாமதமின்றி வழங்கவும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படுவோருக்கு, தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவும், மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X